CM நாற்காலி… அதிமுகவுடன் கூட்டணி… விஜய் போட்ட கண்டிஷன்… அதிர்ந்துபோன டெல்லி தலைமை…!

By Nanthini on ஐப்பசி 21, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும்தான் போட்டி என்ற நிலைமை மாறி விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் NDA கூட்டணியில் விஜயை இணைக்க அதிமுக மட்டுமல்லாமல் டெல்லி மேலிடமும் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லியில் இருந்து முக்கிய நிர்வாகி ஒருவர் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் முதல்வர் நாற்காலி தங்களுக்கே வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. பின்னர் துணை முதல்வர், மத்திய வாரிய பதவிகள் உள்ளிட்டவைகளை வழங்க முன் வந்ததாம். ஆனாலும் விஜய் தரப்பு ஏற்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.