காமெடியில் கலக்கிய விஜயின் 6 படங்கள்.. வசீகரா-வில் வடிவேலுவுடன் செய்த மறக்கமுடியாத அலப்பறைகள்..

By Ranjith Kumar on மார்ச் 10, 2024

Spread the love

தளபதி விஜய் அவர்கள் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, வி.டி.வி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் இசை ஊற்று “யுவன் சங்கர் ராஜா” இசை அமைத்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்று வெங்கட் பிரபு அறிவித்திருக்கிறார். தற்போது விஜய் அவர்கள் துப்பாக்கி, கத்தி, மாஸ்டர் போன்ற பல ஆக்சன் டிராமா கலந்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

ஆனால் விஜயின் ஆரம்ப காலகட்டத்தில் அவர் நடித்த மாபெரும் வெற்றி படங்கள் உள்ளது, விண்டேஜ் விஜயின் பல படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி ரசிகர் மத்தியில நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அது போல் இவரின் ஆரம்ப காலகட்டத்தில் இவர் காமெடி டிராமாவில் நடித்து மாபெரும் வெற்றி கண்டு தற்போது வரை அப்படத்தை தவிர்க்க முடியாமல் பார்க்கக்கூடிய பல படங்கள் உள்ளது, அதில் ஐந்து படத்தை தான் தற்போது பார்க்க உள்ளோம்;

   

2001 ஆம் ஆண்டு பி.ஏ அருண் பிரசாத் இயக்கத்தில் விஜய் மற்றும் பூமிகா மோனல் நடிப்பில் வெளிவந்த படம் தான் “பத்ரி”. இப்படம் காமெடி மற்றும் ஆக்சன் தயாரிப்பில் வெளிவந்து ரசிகர் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. விஜய் இதுவரை இல்லாத நடிப்பையும், புதுவிதமான கதையையும் தன் ரசிகர்களுக்கு இப்படம் மூலம் பரிசளித்துள்ளார்.

   

விஜய், சூர்யா, சார்லி மற்றும் வடிவேலு கூட்டணியில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த “ஃபிரண்ட்ஸ்” படம், இதுவரையில் இல்லாத புது விதமான காமெடி டிராமா மற்றும் எமோஷனல் ஆக உருவாகி ரசிகர் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, விஜய் அவர்களுக்கு சினிமாவில் இப்படம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூறலாம். ரமேஷ் கண்ணா, தேவயானி, ராதாரவி, அபினியா, ஸ்ரீ மன் போன்ற சினிமா பட்டாளமே படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் இசை புயல் இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

 

விஜய், சினேகா, ஜெயராமன், வடிவேலு கூட்டணியில் காமெடி டிராமா மற்றும் காதல் கலவையில் உருவாகிய படம்தான் “வசீகரா”. இப்படம் 2003 ஆம் ஆண்டு செல்வ பாரதி இயக்கத்தில் எஸ்.ஏ ராஜ்குமார் இசையில் வெளிவந்து மாபெரும் வரவேற்பு பெற்றது. இன்று வரை விஜய்யின் க்யூட்டான எக்ஸ்பிரஷனில் உருவான இப்படம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். விஜய்யும் வடிவேலும் கலந்து கொடுக்கும் காமெடி தற்போது வரை தெகட்ட தெகட்ட தேன் ஆக இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

மகேஷ் பாபு நடிப்பில் ஒக்குடு என்ற தெலுங்கு படத்தை 2009 ஆம் ஆண்டு விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்து, தமிழ் சினிமாவில் இன்று வரை தவிர்க்க முடியாத படமானது தான் “கில்லி”. இப்படத்தில் விஜயின் அழகான நடிப்பும் மற்றும் ஆக்சன் கலந்த கலவையும், வில்லத்தனமான பிரகாஷ்ராஜ் நடிப்பும் தமிழ் ரசிகர்களின் மத்தியில் தவிர்க்க முடியாத வரவேற்பை பெற்று, இன்று வரை படத்தின் தாக்கத்தை வைத்து இருக்கிறது. திரிஷா மற்றும் விஜயின் காமினேஷனில் வரும் ரொமான்ஸ் மிகப் பிரமாதமாக இருக்கும்.

2002 ஆம் ஆண்டு ஜான் அவர்களின் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா நடிப்பபல் வெளிவந்த படம் தான் “சச்சின்”. காமெடி டிராமா மற்றும் காதல் கலவையில் வெளிவந்த இப்படம் தமிழ் சினிமாவில் விஜய் இன்று வரை இது போல் வேறு எந்த படமும் நடித்ததில்லை, விஜயின் அழகான நடிப்பும் ரசிக்கக்கூடிய உடல் மொழியும் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் மிக ரசிக்கக்கூடிய படத்தில் ஒன்றாகும். தேவி ஸ்ரீ பிரசாத் அவர்கள் இசையில் விஜய்யின் அழகான உடல் மொழியும் ஜெனிலியாவின் க்யூட்டான எக்ஸ்பிரஷனும் மிகத் தத்ரூபமாக இருக்கும். விஜய் முழுக்க முழுக்க காமெடி டிராமா படத்தில் நடித்த முதலும் கடைசியும் இதுவே ஆகும்.