அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பிரச்சனை நிலவிவரும் நிலையில் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய அடுத்த கட்ட நகர்வு அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததையடுத்து, விஜய் அடுத்த அதிரடியை தொடங்கியுள்ளார். அதாவது ஒவ்வொரு மண்டலத்திலும் அதிமுகவின் முக்கிய முகமாக இருக்கும் தலைவர்களை, தங்களின் பக்கம் இழுப்பதற்கு செங்கோட்டையனிடம் அசைன்மெண்ட் கொடுத்துள்ளாராம். அதன் காரணமாகவே, மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் சொல்லியுள்ளாராம். விஜய்யின் இந்த அடுத்தகட்ட நடவடிக்கை, இபிஎஸ் தரப்பை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாம்.
