வளத்துவிட்ட விஜயகாந்தை மோசமாக பேசிய நடிகர்.. ஆனால், அவன் ஒரு பிறவிக் கலைஞன் அவன நடிக்க விடுங்கனு சிபாரிசு செய்த விஜயகாந்த்..

By Archana on மார்கழி 29, 2023

Spread the love

நடிகர் விஜயகாந்த் கடந்த 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமான நிலையில், அவரது உடல் தொண்டர்கள் மற்றும் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிறகு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் பற்றின பல செய்திகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன் பிரபாகரன் ஆகியோர் கொடுத்த நேர்காணல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

#image_title

வைகைப்புயல் வடிவேலுவின் பெயர் மீண்டும் சினிமா உலகில் உலவி வரும் நிலையில், சந்திரமுகி 2 உட்பட அடுத்தடுத்து சில படங்களில் நடித்தும் வருகிறார். இருப்பினும் கூட, அவரது பெயர் கோலிவுட் வட்டாரத்தில் எதிர்மறையாக பரவத் தொடங்கி இருக்கிறது. அவருடன் ஒரு காலகட்டத்தில் உடன் நடித்த சக நடிகர்கள் அவரைப் பற்றி பல நேர்காணல்களில் கூறி வரும் விஷயங்கள் அவரது பெயரை கெடுக்கும் விதமாக அமைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இறந்து போன நகைச்சுவை நடிகர் போண்டா மணி இறப்பிற்கு கூட வடிவேலு வராதது மேலும் அவரது பெயரை மோசமாக்கியது. ஒரு வருடத்திற்கு முன்பு அவர் உடல்நிலை சரியில்லாமல் போகும் போது கூட வடிவேலுவிடம் உதவி கேட்டும் அவர் கொடுக்காதது பேசுபொருளாக மாறியிருந்தது.

   
   

#image_title

 

இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் இறப்பிற்கு கூட அவர் நேரில் அஞ்சலி செலுத்த வராதது கோலிவுட் வட்டாரத்தில் மீண்டும் பேசுப் பொருளாக மாறியுள்ளது. சின்னகவுண்டர் படம் முதல் பல படங்களில் விஜயகாந்துடன் இணைந்து வடிவேலு நடித்துள்ளார். அத்தோடு வடிவேலுவுக்கு பல கதாபாத்திரங்களை சிபாரிசு செய்ததும் விஜயகாந்த் தான் என்பது பலருக்கு தெரியும். இதற்கிடையில் வடிவேலு அரசியலில் வந்த பிறகு பல தலைவர்கள் குறித்து அநாகாரீகமான கருத்துகளை பொது வெளியில் பரப்பி வந்தார். அந்த வகையில் விஜயகாந்த் குறித்தும் பல கருத்துகளை கூறியிருக்கிறார்.

#image_title

குறிப்பாக ‘கேப்டன், எதுக்கு கேப்டன் நீ.. எந்நேரமும் தண்ணி போடுறவன் பெயர் கேப்டனா? தண்ணீரில் மிதக்கும் கப்பலை ஓட்டியவனுக்கு பேர்தான் கேப்டன்’ என்று பேசினார் வடிவேலு. இதனால் வடிவேலுக்கு ரெட் கார்ட் கொடுத்து ஐந்து வருடங்களாக சினிமாவில் நடிக்க விடாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். இருப்பினும் கூட பல தயாரிப்பாளர்களிடம், ‘வடிவேலு ஒரு பிறவிக் கலைஞர், அவன் நடிக்க வேண்டும் வாய்ப்பு கொடுங்க’ னு விஜயகாந்த் வடிவேலுக்கு சிபாரிசு செய்திருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.