எம்.பி பதவி எல்லாம் முக்கியமல்ல… எனக்கு அது மட்டும் போதும்… தந்தையை நினைத்து கண்ணீருடன் பேசிய பிரபாகரன்..!!

By Meena on ஆவணி 10, 2025

Spread the love

1991 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’ இது ஆர் கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பின் மூலம் வெளியானது. இந்தப் படம் விஜயகாந்தின் நூறாவது படமாகும். இந்த படத்தின் மூலம் விஜயகாந்த்திற்கு கேப்டன் என்ற பெயரும் கிடைத்துள்ளது. கேப்டன் விஜயகாந்த்திற்கு இரண்டு மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் உள்ளனர். இதில் மூத்த மகன் அரசியலிலும், இரண்டாவது மகன் சினிமாவிலும் களமிறங்கியுள்ளனர். தற்போது கேப்டன் பிரபாகரன் வரும் 22ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

இந்நிலையில் விழா ஒன்றில் விஜய பிரபாகரன் கண்ணீருடன் பேசிய விஷயம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது. அதில் எனக்கு “எம்.பி பதவி எல்லாம் முக்கியமல்ல. கேப்டன் மகன் விஜய பிரபாகரன் என்ற பெயர் எனக்கு போதும். எனக்கு வேறு பெருமை எதுவும் வேண்டாம்,கடைசிவரை விஜயகாந்த் மகன் என்ற பெருமை மட்டும் போதும்”என்று கூறியுள்ளார்.