Categories: சினிமா

நான் அப்போது பிரபலம் இல்லாத நடிகர்… எனக்காக ஒருமாதம் ஷூட்டிங்கை தள்ளிவைத்தார்- விஜயகாந்த் பற்றி பிரபல நடிகர் பகிர்ந்த சம்பவம்!

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார். பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார். அந்தளவுக்கு இமேஜை மெய்ண்டெய்ன் செய்து வந்தார். விஜயகாந்த் கருப்பாக இருந்த காரணத்தால் அவரோடு ஜோடியாக நடிக்க முதலில் நடிகைகள் மறுத்தார்கள்.

ஆனாலும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு 80 களிலும் 90 களிலும் பிஸியான நடிகராக வலம் வந்தார். 2000 களுக்குப் பிறகு அரசியலுக்கு சென்ற அவர் சினிமாவில் நடிப்பதைக் குறைத்தார். உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு மறைந்தார்.

இந்நிலையில் இன்று இந்திய அளவில் அறியப்படும் நடிகராக இருக்கும் சோனு சூட் தன்னுடைய ஆரம்பகாலப் படங்களில் ஒன்றான கள்ளழகர் படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் உடன் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “கள்ளழகர் படத்தில் நான் சரியாக இருப்பேன் என விஜயகாந்த் சார் நினைத்தார். எனக்கு அப்போது சினிமாவில் சண்டை போடத் தெரியாது. அதனால் அதைக் கற்றுக்கொள்ளும் வரை எனக்காக அவர் ஒரு மாதம் ஷூட்டிங்கைத் தள்ளிவைத்தார்.

அவருடைய இந்த அன்பால் முதல் படத்திலேயே நான் ராஜ கவனிப்பைப் பெற்றேன். அடுத்தவர்களை எப்படி உபசரிப்பது என்பதை நான் அவரிடம் இருந்துதான் கற்று பின்தொடர்கிறேன். அவர் கடவுளின் குழந்தை.” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

4 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

4 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

4 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

5 மணத்தியாலங்கள் ago