Connect with us

Shot-காக நாம காத்திருக்கலாம்.. நமக்காக Shot காத்திருக்க கூடாது.. ‘வானதைப்போல’ படக்குழுவை பிரமிக்க வைத்த கேப்டன்

CINEMA

Shot-காக நாம காத்திருக்கலாம்.. நமக்காக Shot காத்திருக்க கூடாது.. ‘வானதைப்போல’ படக்குழுவை பிரமிக்க வைத்த கேப்டன்

மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காத வள்ளலாக பார்க்கப்படுபவர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த். விக்ரமன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வானத்தை போல.

விஜயகாந்த் நடித்த இந்த படத்தில் பிரபு தேவா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, ரமேஷ் கண்ணா, செந்தில், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமைந்தது.

அதோடு வானத்தைப்போல படத்திற்கு சிறந்த படம் என விருதும் கிடைத்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவம் பற்றி நரேன் அவர்கள் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

   

#image_title

 

அதாவது இரவு 12 மணி அளவில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதன் பிறகு அடுத்த படப்பிடிப்பு அதிகாலை சூரிய உதயத்தின் போது எடுக்க வேண்டுமாம். இதனால் விஜயகாந்த்திடம் ரூமுக்கு சென்று விட்டு அதிகாலையில் வருமாறு கூறியுள்ளார்.

பின்னர் அனைவரும் புறப்பட்டு சென்று விட்டனர். அதிகாலையில் படப்பிடிப்பிற்கு வரும் வழியில் வண்டி ஒன்று நடுவழியில் சிக்கி உள்ளது. அதனை அப்புறப்படுத்தி வருவதற்குள் விடிந்துவிட்டது.

ஆனால் படபிடிப்பு எடுக்க வேண்டிய இடத்தில் விஜயகாந்த் அமர்ந்திருக்கிறார். அவரிடம் சென்று எப்போது வந்தீர்கள் என்று கேட்டபோது ரூமுக்கு சென்று சும்மா தானே இருக்க வேண்டும்.

அதனால் தான் டிரைவரிடம் கேட்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து விட்டேன் என கூறியுள்ளார். அதோடு நமக்காக ஷாட் காத்திருக்கக் கூடாது நாம் தான் ஷாட்டுக்காக காத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
indhuramesh
Continue Reading
To Top