விமான நிலையத்தில் எதார்ச்சியாக நேருக்கு நேர் சந்தித்த போது, வடிவேலுவை பார்த்து விஜயகாந்த் கேட்ட அந்த வார்த்தை..

By Sumathi

Updated on:

நடிகர் விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படத்தில், அவருடன் குடை பிடித்துவரும் மாகாளி கேரக்டரில் வடிவேலு நடித்திருப்பார். முதலில் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டியவர் மண்ணாங்கட்டி சுப்ரமணியம். அதாவது எங்க சின்ன ராசா, சின்ன மாப்ளே போன்ற படங்களில் நடித்த காமெடி நடிகர்தான். ஆனால் அவர் பாக்யராஜ் படங்களில் நடித்துக்கொண்டு பிஸியாக இருந்ததால், அந்த கேரக்டரை வடிவேலுவுக்கு கொடுக்கச் சொன்னவர்தான் விஜயகாந்த். ஆனால் அந்த நன்றி எல்லாம் மறந்துவிட்டு, தான் வளர்ந்த பின்பு கேப்டனை பொது மேடைகளில் கண்டபடி விமர்சித்து பேசினார் வடிவேலு. ஆனால் கேப்டன் அதை கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து மற்றவர்கள் கோபப்பட்டு பேசிய போதும், அட விடுங்கப்பா, அவன் ஏதோ உளறீட்டு போறான் என சகஜமாக கூறியிருக்கிறார்.

   

விஜயகாந்த், வடிவேலு இருவருமே நீண்டகாலமாக சென்னையில் இருந்தாலும் அவர்களது சொந்த ஊர் மதுரைதான். அதற்காக இருவரும் சென்னை விமான நிலையத்துக்கு வருவது வழக்கம். அப்படி ஒருவேளை வரும்போது இருவரும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வது என ஒருமுறை பலமாக யோசித்து இருக்கிறார் வடிவேலு. அப்போது அவருடன் இருந்த ‘அண்ணனின் விழுதுகள்’ சிலர் கூறிய யோசனைப்படிதான் அந்த பெரிய சைஸ் கருப்புநிற கூலிங்கிளாஸ் அணிய துவங்கியிருக்கிறார். ஏனெனில் முகத்தில் பெரிய கருப்பு நிற கண்ணாடி மாட்டியிருந்தால், யாரை பார்த்தாலும் தெரியாது. ஒருவேளை யார் எதிரில் வந்தாலும் தெரியாத மாதிரி, பார்க்காத மாதிரி போய்விடலாம் என்ற யோசனைப்படி வடிவேலு கருப்பு நிற கண்ணாடி அணியத் துவங்கி, இன்னும் அதை பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஒருநாள் வடிவேலு பயந்தது போலவே ஆகிவிட்டது. 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது விஜயகாந்தை கண்டபடி விமர்சித்து பேசியிருக்கிறார் வடிவேலு. 2012ம் ஆண்டில் ஒருநாள் சென்னை ஏர்ப்போர்ட்டில் இருந்து விஜயகாந்த் வெளியே வருகிறார், அப்போது வடிவேலு உள்ளே போகிறார். அப்போது இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் ஒரு சூழல் ஏற்படுகிறது. அப்போது கண்டும் காணாதது போல வடிவேலு பம்மி இருக்கிறார். அப்போது விஜயகாந்த், என்ன வடிவேலு, நல்லா இருக்கியா என்று கேட்டிருக்கிறார்.

அப்படியே ஷாக் ஆகிவிட்டார் வடிவேலு. விஜயகாந்த், அப்படி தன்னை அழைத்து பேசுவார் என அவர் சிறிதும் நினைத்து பார்க்கவில்லை. கேப்டன், நல்லா இருக்கேங்க கேப்டன் என கும்பிடு போட்டு சொல்லிவிட்டு, அங்கிருந்து உடனடியாக அந்த இடத்தை கிராஸ் செய்து எஸ்கேப் ஆகி இருக்கிறார் வடிவேலு. இது விஜயகாந்துடன் வந்தவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்துள்ளது. என்ன அண்ணே, நீங்க போய் வடிவேலு கிட்ட பேசலாமா, எனக் கேட்டதற்கு விடுய்யா, அவன் ஏதோ பேசிட்டு போறான் என கேஷூவலாக சிரித்தபடி சென்றிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

author avatar
Sumathi