Categories: சினிமா

என்னை வச்சு ஒன்னுமே எடுக்க மாட்டேங்குற?… ரமணா ஷூட்டிங்கில் முருகதாஸிடம் கடுப்பான கேப்டன் – இறுதியில் நடந்த டிவிஸ்ட்!

Spread the love

 

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் அரசியலில் கவனம் செலுத்தியதால் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. ஆனாலும் 2000க்கு பிறகே அவர் பெரிய ஹிட் படங்கள் எதையும் கொடுக்கவில்லை. அவர் கடைசியாகக் கொடுத்த ஹிட் படம் என்றால் அது ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ரமணா திரைப்படம்தான்.

ஆனால் ரமணா படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் முருகதாஸின் வேலைப்பாணியில் அதிருப்தி ஏற்பட்டு விஜயகாந்த் அவரிடம் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரமணா படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 100 நாட்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் விஜயகாந்தை வைத்து வெறும் 45 நாட்கள் மட்டுமே ஏ.ஆர். முருகதாஸ் ஷூட்டிங் செய்தாராம். அதிலும், காலை 8 மணிக்கு படப்பிடிப்பு என்றால் மதியம் 1 மணியுடன் ஷூட்டிங் ஓவர் என விஜயகாந்தை அவர் அனுப்பி விடுவாராம்.

அதே போல நைட் ஷூட்டிங்கின் போது 7 மணிக்கு ஆரம்பித்தால் 10 அனுப்பிவிடுவாராம். இப்படி ஒருநாள் அவரிடம் சொன்ன போது கேப்டன் கடுப்பாகி ’நீ என்ன வச்சு என்னதான் எடுக்குறன்னே எனக்கு  தெரியல” என கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். முருகதாஸ் அவருக்கு எவ்வளவோ விளக்கி சொல்லியும் அவருக்கு கோபம் குறையவில்லையாம். ஏனென்றால் விஜயகாந்த் அதுவரை நடித்த படங்களில் எல்லாக் காட்சிகளிலும் அவர் வருவது போலதான் இயக்குனர்கள் எடுத்துள்ளார்கள். அதனால் முருகதாஸ் ஸ்டைல் அவருக்கு பிடிபடவில்லை.

ஆனாலும் ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்துள்ளார். படத்தின் எல்லா பணிகளும் முடிந்து  ஒட்டுமொத்த படத்தையும் விஜயகாந்துக்கு போட்டுக் காட்டியுள்ளார். அப்போதுதான் விஜயகாந்துக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. ஹீரோ எல்லா சீன்லையும் வரணும்னு அவசியம் இல்லை. ஹீரோவை ஒளித்து வைத்தும் படத்தை ஹிட் கொடுக்கலாம் என்று புரிந்து கொண்டு முருகதாஸை அழைத்துப் பாராட்டினாராம். படமும் வெளியாகி அதிரி புதிரி ஹிட்டானது நாம் அறிந்ததே.

vinoth

Recent Posts

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

10 minutes ago

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

14 minutes ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

15 minutes ago

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

19 minutes ago

ஏய்… கத்தக் கூடாது… பேசாமல் இரு… ஓடும் காரில் 20 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 2 மணி நேரப் பேரதிர்ச்சி… ம . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…

21 minutes ago

“10 நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”…. NDMA-விடம் மாட்டிக்கொண்ட தமிழ்நாடு அரசு…. வைரலாகும் ஷாக் ரிப்போர்ட்….!

அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…

23 minutes ago