Categories: சினிமா

73 வயதிலும் குதிரைபோல நிற்காமல் ஓடும் ரஜினி..! தலைவர் நடிப்பில் வெளிவர இருக்கும் 5 படங்கள்..

Spread the love

1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்திரன் அவர்கள் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த “அபூர்வ ராகங்கள்” படம் மூலம் தான் தமிழ் திரையுலகில் முதன்முதலில் “ரஜினிகாந்த்” அவர்கள் அறிமுகமானார். அப்படத்தில் அவர் ஒரு விதவை பொண்ணுக்கு கணவராக நடித்து தமிழ் திரை உலகில் ஒரு சிறந்த நடிகர் என்று பெயர் பெற்று மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்திருந்தார்.

அதன் பின்னதாக முத்தாரம்மன், புவனா ஒரு கேள்விக்குறி, பில்லா, டான், மூன்று முகம், நல்லவனுக்கு நல்லவன் என்று பல அதிரபுதியான ஹிட் அடித்த படங்களை நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயக வலம் வந்தார். அதன் பின் ரஜினி அவர்கள் நிற்காத குதிரையாக இதுவரை 40 வருடங்களாக சினிமா துறையில் பணிந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஹாலிவுட் போன்ற துறையில் நடிக்காத இடமே கிடையாது. இன்று வரை ரஜினிகாந்த் 169 படங்கள் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடி சினிமா துறையில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார்.

இன்னும் ரஜினிக்கு காத்திருக்கும் படங்கள் ஏராளம் உள்ளன. ரஜினியை வைத்து இயக்க ஐந்து இளம் இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இயக்குனர் மூலம் வரும் ஐந்து படங்களை பற்றி நான் பார்க்க போகிறோம். தற்போது “ஜெய் பீம்” போன்ற சமூக கருத்துள்ள மாபெரும் படைப்பை கொடுத்த “ஞானவேல்” அவர்கள் இயக்கத்தில் “வேட்டையன்” என்ற டைட்டில் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். அதன் பின்னதாக மாநகரம், கைதி, மாஸ்டர், லியோ போன்ற மாபெரும் படைப்புகளை கொடுத்த “லோகேஷ் கனகராஜ்” அவர்கள் “தலைவர் 171” படத்தை இயக்க உள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற சமூகத்தின் அடிநிலையை எடுத்துக்காட்டும் படங்களை உருவாக்கிய “மாறி செல்வராஜ்” அவர்கள் இயக்கத்தில் 172 படத்தில் நடிக்க உள்ளார். அதன் பின்னர் ஆக 600 கோடி வசூலுக்கும் மேல் கொடுத்து தலைவர் தான் நிரந்தரம் என்ற பட்டத்தை மீண்டும் எடுத்துக் கொடுத்த “நெல்சன்” அவர்கள் ஜெயிலர் 2 இயக்க உள்ளார்.

அதன் பின்னதாக செல்லமாக ஆக்சன் கிங் அட்லி என்று கூறும் இயக்குனர் அட்லி அவர்கள் தலைவர் 174 படத்தை இவர்கள் அனைவரும் முடித்த பின் அட்லீ அவர்கள் தலைவரை வைத்து இயக்க உள்ளார். 73 வயதாகியும் ரஜினி அவர்கள் இன்னும் நிக்காமல் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இது ரசிகர்கள் மிக ஒரு எடுத்துக்காட்டும் புத்துணர்ச்சியாக இருக்கிறது.

Ranjith Kumar

Recent Posts

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

11 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

35 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

54 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

58 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

1 மணத்தியாலம் ago