#image_title
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் படம் எடுப்பதென்றால், அவுட்டோர் ஷூட்டிங் செல்வார்கள். பெரும்பாலும் ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, கோபிச்செட்டிபாளையம் பகுதிகளாக தான் அது இருக்கும். 1980, 90களில் வெளிவந்த பல படங்கள் இந்த பகுதிகளில்தான் பெரும்பாலும் எடுக்கப்பட்டதாக இருக்கும். இப்போதெல்லாம் வெளிநாடுகளில் அதுவும் பாரின் போய் படம் எடுப்பதெல்லாம் பேஷனாக இருக்கிறது. ஆனால் அந்த காலத்தில் பட்ஜெட் கம்மியான படங்கள்தான். அதுவும் கதையை மட்டுமே நம்பி படம் எடுத்த காலகட்டம்தான். அதுவும் சென்னையிலேயே எடுக்கப்பட்ட படங்கள் மிகமிக அதிகம்.
Anandraj
இதுகுறித்து ஒரு நேர்காணலில் நடிகர் ஆனந்தராஜ் கூறியதாவது, இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் வீட்டில் அடிக்கடி ஷூட்டிங் நடக்கும். சாலிகிராமத்தில் அவரது வீடு இருந்தது. அப்போது கேரவன் வசதி எல்லாம் கிடையாது. விஜயகாந்த் நடித்த படங்கள் நிறைய அங்கு ஷூட்டிங் நடந்தது. அங்கு படப்பிடிப்பில் விஜயகாந்துக்கு ரூம் தருவார்கள். நான் கலந்துக்கொண்டால், எனக்கு காஸ்ட்யூம் மாற்ற, ரெஸ்ட் எடுக்க ரூம் ஒதுக்கி தருவார்கள். அவைலபிளாக எந்த ரூம் இருக்கிறதோ அது தருவார்கள். பெரும்பாலும் அது விஜய் தம்பியோட ரூமாக தான் இருக்கும். அவர் அப்போது ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தார். அவர் ரூமுக்குள் போனால் தம்பி, நல்லா இருக்கீங்களா என்பேன். ஹாய் அங்கிள் என்றுதான் விஜய் என்னை கூப்பிடுவார். அவர் ரூமில் புரூஸ்லி போட்டோக்களாக ஒட்டி வைத்திருப்பார்.
Anandraj
விஜயை நான் இப்போது நண்பா, தம்பி என்றுதான் அழைக்கிறேன். நண்பர், தம்பி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். நான் அப்போது விஜயகாந்த் படங்களில் நிறைய நடித்திருக்கிறேன். பெரும்பாலான விஜயகாந்த் பட ஷூட்டிங், இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் வீட்டில், அதாவது விஜய் வீட்டில்தான் நடக்கும். எல்லோருக்கும் ரூம் கொடுத்த போது, விஜய் அறையில் நான் அதிகமாக தங்கியிருக்கிறேன், என்று கூறியிருக்கிறார் நடிகர் ஆனந்தராஜ். இப்படி தனது வீட்டில் நடந்த ஷூட்டிங், விஜயகாந்த் நடிப்பு, சண்டை காட்சிகளை பார்த்துதான் விஜய் நடிகனாக வேண்டும் என ஆசைப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. அப்படி என்றால் விஜயகாந்த் நடித்த பல படங்கள் விஜய் வீட்டில் எடுக்கப்பட்டது என்ற உண்மையும் தெரிய வந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…