#image_title
தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.
எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார். பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார். அந்தளவுக்கு இமேஜை மெய்ண்டெய்ன் செய்து வந்தார்.
90 களில் விஜயகாந்த் கொடுத்த சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று வானத்தைப் போல. அப்போது ஆக்ஷன் படங்களாக நடித்து வந்த விஜயகாந்த், இயக்குனர் விக்ரமன் ஸ்டைலில் ஒரு குடும்ப செண்ட்டிமெண்ட் படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளே இருக்காது. க்ளைமேக்ஸில் மட்டும் ஒரே ஒரு சண்டைக் காட்சி வரும்.
அந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் விஜயகாந்த் தம்பிகளை விட்டு பிரிந்து கையில் மஞ்சப்பையோடு செல்வது போன்ற எமோஷனலான காட்சியை படமாக்கினாராம் விக்ரமன். அந்தக் காட்சியை நடித்து முடித்ததும் விஜயகாந்த் நடிகரும் அந்த படத்தின் ப்ரொடக்ஷன் மேனேஜருமான பாவா லட்சுமணனை அழைத்து “டேய் லட்சுமணனா என்னடா க்ளைமேக்ஸ் இது. நான் மஞ்சப்பைய தூக்கிட்டு நடந்து போற மாதிரி… இதப் பாத்தா என் ஃபேன்ஸ் என்ன நெனைப்பானுங்க… தலைவருக்கு மார்க்கெட் போயிடுச்சு.. பொட்டி படுக்கையைக் கட்டிட்டு மறுபடியும் மதுரைக்கே கெளம்பிட்டாருன்னு நெனைக்க மாட்டாங்களா” என ஜாலியாகக் கேட்டாராம்.
அதற்கு பாவா லட்சுமணன் “இல்லண்ண… சூப்பர் கிளைமேக்ஸ்.” என சொன்னது, “நீ விக்ரமன் ஆளுல்ல அப்படிதான் பேசுவ” என்றாராம். படம் ரிலீஸாகி ஹிட்டானதும் அவரை அழைத்து 5000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கிக் கொடுத்தாராம்.
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…