Connect with us

ரிலீஸூக்கு ஒரு வாரம் முன்பு வரை ஷூட்டிங்… ரெண்டு நாளில் இளையராஜா பின்னணி இசை.. மேஜிக் செய்த செல்வமணி..

CINEMA

ரிலீஸூக்கு ஒரு வாரம் முன்பு வரை ஷூட்டிங்… ரெண்டு நாளில் இளையராஜா பின்னணி இசை.. மேஜிக் செய்த செல்வமணி..

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

80 களின் இறுதியில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய விஜயகாந்த் அதன் பின்னர் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களாகவே நடித்துத் தள்ளினார். இந்த காலகட்டத்தில்தான் அவர் அதிகமாக பிலிம் இன்ஸ்ட்யூட் மாணவர்கள் இயக்கத்தில் அதிகமாக படங்களில் நடித்தது.

அப்படி அவர் அறிமுகப்படுத்திய பிலிம் இன்ஸ்ட்யூட் மாணவர்களில் ஒருவர்தான் ஆர் கே செல்வமணி. அவர் இயக்கிய புலன் விசாரணை திரைப்படம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்த பிரபல ரௌடி ஆட்டோ சங்கரின் கதையைத் தழுவியதாக இருந்ததால் பொது மக்களால் பெரியளவில் கவனத்தை ஈர்த்து சூப்பர்ஹிட் ஆனது.

   

இதையடுத்து இருவரும் இணைந்து கேப்டன் பிரபாகரன் படத்தை உருவாக்கினார்கள். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது செல்வமணி அதிகளவில் காட்சிகளை எடுத்துக் கொண்டே சென்றுள்ளார். இது விஜயகாந்துக்கும் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

அதனால் ஷூட்டிங்கையே நிறுத்தியுள்ளார்கள். அதன் பிறகு எடுத்த காட்சிகளை எல்லாம் எடிட் செய்து பார்த்துள்ளனர். படத்தின் ரிலீஸும் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னும் பல காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருந்ததாம். ஆனால் நேரம் இல்லாததால் இரண்டு நாட்கள் மட்டும் கொடுத்து 2000 அடி பிலிம் ரோல் மட்டும் கொடுத்து இதற்குள் என்ன எடுக்க வேண்டுமோ அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

அந்த இரண்டு நாளில் விடிய விடிய ஷூட்டிங் நடத்திய செல்வமணி அந்த இரண்டு நாளில் எடுத்த காட்சிகளைதான் இறுதி வடிவத்தில் அதிகமாக பயன்படுத்தியுள்ளார். ரிலீஸுக்கு ஐந்து நாளுக்கு முன்னர் இளையராஜாவிடம் கொடுத்து பின்னணி இசையைக் கொடுத்துள்ளார். அப்படி கடைசி கட்ட விறுவிறுப்போடு எடுக்கப்பட்ட அந்த கேப்டன் திரைப்படம் விஜயகாந்தின் கேரியரில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top