Connect with us

CINEMA

பெட்ரோமாக்ஸ் லைட் காமெடி உருவாக காரணமே கேப்டன் விஜயகாந்த் தானா..? வெளியான சுவாரசிய தகவல்..

1984 ஆம் ஆண்டு ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். விஜயகாந்த் – ரேவதி நடித்த இந்த படத்தில் ராதாரவி, வடிவுக்கரசி, கோவை சரளா, உசிலைமணி உள்ளிட்டோருடன் காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி செந்திலும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் பார்ப்போரை கண்கலங்க வைக்கும் காட்சிகளும் வாய் வீட்டு சிரிக்க வைக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக கவுண்டமணி செந்தில் இணைந்து விட்டார்கள் என்றால் அந்த படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று சொல்லலாம்.

   

அதிலும் இன்றளவும் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும் காமெடியான “பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா” இந்த படத்தில் இடம்பெற்றது தான். இந்த காமெடி காட்சி உருவாவதற்கு விஜயகாந்த் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

படப்பிடிப்பின் போது இப்படி ஒரு காமெடி காட்சி எடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கவே இல்லையாம். அப்போது ஒரு நாள் படப்பிடிப்பிற்கு இரண்டு மணி நேரம் தான் தாமதமாக வருவேன் என்று விஜயகாந்த் இயக்குனர் சுந்தர்ராஜனிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இதனை மறந்து போன சுந்தர்ராஜன் படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து விட்டார். ஆனால் அதன் பிறகு தான் அவருக்கு விஜயகாந்த் தாமதமாக வருவார் என்பதை நினைவு படுத்தி உள்ளனர்.

என்ன செய்யலாம் என்று யோசித்தவர் ஒரு பக்கம் கவுண்டமணி செந்தில் இருப்பதை பார்த்தவுடன் அவர்களை வைத்து காமெடி காட்சி படமாக்க முடிவு செய்து உடனடியாக பெட்ரமாக்ஸ் லைட் வேண்டும் என கொண்டு வர சொல்லியுள்ளார்.

அதன் பிறகு தான் 2 மணி நேரத்தில் இன்றளவும் பேசப்படும் காமெடியை சுந்தரராஜன் எடுத்துள்ளார். ஆக இவ்வளவு பிரபலமான காமெடி கிடைத்ததற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் 2 மணி நேரம் தாமதமாக வந்தது தான் என்று கூறலாம்.

author avatar
indhuramesh
Continue Reading

More in CINEMA

To Top