இரண்டு நண்பர்களுக்குள் இடையில் புகுந்த 3-வது நபர்.. விஜயகாந்த், ராவுத்தர் பிரிந்ததில் உண்மை பின்னணி என்ன..?

By Sumathi

Updated on:

தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் நல்ல நட்புக்கு உதாரணமாக பலரும் சொன்னது விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் நட்பைதான். மதுரையில் இருவரும் சிறுவர்களாக இந்த பால்ய வயதிலேயே நண்பர்களாக இருந்தவர்கள். மதுரையில் சினிமா பார்ப்பதும்தான் இருவருக்கும் இருந்த முக்கிய பொழுதுபோக்கு. வாலிபராக வளர்ந்து நின்ற விஜயராஜை பார்த்து, (சினிமாவுக்கு வரும் முன் அவரது பெயர் விஜயராஜ்தான்) விஜி, நீ சினிமாவில் நடி என்று சினிமா நடிகராகும் ஆசையை கேப்டனுக்கு தூண்டிவிட்டதே அவரது நண்பர் இப்ராகிம் ராவுத்தர்தான். இருவரும் சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடி அலைந்தனர். சில படங்களில் விஜயகாந்த் நடித்தும் பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆகவில்லை.

   

இந்த சூழலில் விஜயகாந்துக்கு ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. அப்போது ஏவிஎம் நிறுவனத்தில் நடிப்பதே ஒரு பெரிய வாய்ப்பு, கவுரவமாக கருதப்பட்டது. அதாவது முரட்டுக்காளை படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க விஜயகாந்துகா்கு அழைப்பு வந்தது. அப்போது வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்தை விட 3 மடங்கு அதிக சம்பளம்.

படங்களில் வாய்ப்பே இல்லாத நிலையில், சரியாக சாப்பிடக் கூட வசதியற்ற சூழலில், விஜயகாந்த் நிலைமையை சமாளிக்க வழியின்றி அதற்கு சம்மதித்து அட்வான்ஸ் வாங்கி விடுகிறார். ஆனால், இதற்கு இப்ராகிம் ராவுத்தர் மறுப்பு தெரிவித்து, அட்வான்ஸ்சை திருப்பி கொடுக்க வைத்தார். என் நண்பன் விஜி நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பான், என்று உறுதியாக நின்று, அவரை தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உயர்த்தி இருக்கிறார். ஏனென்றால் விஜயகாந்தை ஆரம்ப காலத்தில் நல்ல நடிகனாக உருவாக்கியது அவர்தான்.

கேப்டன், ராவுத்தர் இடையில், அதுவரை அவர்களுக்குள் இடையில் யாருமில்லாமல் நிலையில் விஜயகாந்த், பிரேமலதா திருமணம் நடந்தது. அதன் பிறகு, விஜயகாந்தை ஒரு மனைவியாக பிரேமலதா கவனித்துக்கொண்டார். அவரது அன்றாட பணிகளை கவனித்தார். கூடவே, பிரேமலதா தம்பி எல்கே சுதீஷூம் கேப்டனும் இணைந்துவிட்டார். அதன்பிறகு அவர்களுக்கு மத்தியில் இப்ராகிம் ராவுத்தர் செல்ல முடியவில்லை. அதன்பிறகு அதுவரை கேப்டன், ராவுத்தர் இருவருக்கும் இடையில் பொதுவாக இருந்த சொத்துகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டது.

இருவரது சந்திப்பும் குறைந்து போனது. அதன்பிறகு கட்சி ஆரம்பித்தார் விஜயகாந்த். அப்போது ராவுத்தர் அவருடன் இல்லை. அவர் இருந்திருந்தால், விஜயகாந்தை சினிமாவில் உச்சத்துக்கு கொண்டு போனது போல், அரசியலிலும் உச்ச நிலைக்கு, உயர்ந்த பதவிக்கு விஜயகாந்தை, ராவுத்தர் கொண்டு வந்திருப்பார். அவர்களுக்கு இடையில் பிரேமலதா வந்த பிறகுதான் அவர்களது பிரிவு தவிர்க்க முடியாததாகி விட்டது என, ஒரு நேர்காணலில் சினிமா விமர்சகர் சுபேர் கூறியிருக்கிறார்.

author avatar
Sumathi