Categories: சினிமா

ஏற்கனவே ஒரு ரஜினிகாந்த் இருக்க நீ எதற்கு விஜயகாந்த்..? திரைக்கு பின் விஜயகாந்த் அனுபவித்த சோகங்கள்..

Spread the love

நடிகர் விஜயகாந்த் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது நினைவுகளும், நற்பண்புகளும், திரை வாழ்க்கையும், அரசியல் வாழ்க்கையும், என்றும் நம்மை விட்டு அகலாத ஒன்று. திரையில் 25 வருடங்களுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட படங்களை அவர் நடித்திருந்தாலும் இந்த செல்வாக்கும், வாய்ப்புகளும் அவ்வளவு எளிதில் அவருக்கு கிடைத்திடவில்லை. சினிமா என்பது இன்று மட்டுமல்ல அன்றுமே ஒரு கடினமான துறையாக தான் இருந்து வந்துள்ளது. நடிகர்களுக்கு அதிலும் வெள்ளையாக இருப்பவர்கள் மட்டும்தான் இத்துறையில் ஜொலிக்க முடியும் என்ற ஒரு மாய தோற்றத்தை கொண்டிருந்த சினிமா இருந்தபோது அந்த காலகட்டத்தில் கருப்பு நிறத்துடன் கிராமத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது இந்த கருப்பு வைரம்.

#image_title

ஆயினும் கூட பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களால் நிறம் சார்ந்து பல அவமானங்களை சந்தித்திருக்கிறார் விஜயகாந்த். ”ஏற்கனவே ஒரு ரஜினிகாந்த் இருக்கும்பொழுது விஜயகாந்த்” என்ற ஒருவர் வேண்டுமா? என பல இயக்குனர்கள் அவரை கேலி கிண்டலுக்கு உள்ளாக்கியது வேறு கதை. என்னதான் ஹீரோவாக படங்களில் நடித்தாலும் கூட அன்றைய காலகட்டங்களில் அவர்களுக்கு உரித்தான மரியாதை கிடைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. அதற்கு ஒரு உதாரணமாக விஜயகாந்த் துறைக்கு அறிமுகமான புதிதில் ’அகல் விளக்கு’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பின் பொழுது விஜயகாந்த் மதிய உணவிற்காக அமர்ந்த பொழுது பசியாற கொல்ல அவர் சாப்பிடும் பொழுது அந்நேரத்தில் ஹீரோயின் வந்திருக்க அவரை பாதியிலேயே எழுப்பி விட்டு ஹீரோயினுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என அழைத்து சென்று விட்டார்களாம்.

#image_title

இந்த சம்பவத்தின் தாக்கத்தினால் பிற்காலத்தில் தன்னை சந்திக்க வரும் யாரும் பசியோடு சென்று விடக்கூடாது என்பதற்காக தனது அலுவலகத்தில் 24 மணி நேரமும் தன்னை பார்க்க வருபவர்களுக்கு உணவு வழங்க தொடங்கினார் விஜயகாந்த்.
இப்படி நிறத்தாலும் புதிய முகம் என்பதாலும் அவமானப்படுத்தியவர்களை பழிவாங்கும் நோக்கம் விஜயகாந்த் சிறிதும் ஏற்படவில்லை. அதே தயாரிப்பு நிறுவனங்களுக்கு கால் ஷீட் கொடுத்து பல படங்களை கொடுத்து அவை அனைத்தையும் வெற்றிப்படமாக்கி தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபத்தையும் ஈட்டி கொடுத்திருக்கிறார் விஜயகாந்த்.

#image_title

எம்ஜிஆரை போல தண்ணை நாடி வந்தவர்களுக்கும் இல்லை என்று சொல்லாமல் எடுத்து எடுத்து வாரி வழங்கியதால் அவர் பின்னாடி கருப்பு எம்ஜிஆரின் ரசிகர்களால் போற்றப்பட்டார். அதற்கு உதாரணம் சமீபத்தில் மறைந்து போன நகைச்சுவை நடிகர் போண்டாமணியினுடைய குடும்பத்திற்கு தேமுதிக சார்பில் ஒன்றை லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கினார். நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதன் என மக்களுடைய பெயர் வாங்க வேண்டும் என்பதை உறுதியாக கொண்டிருந்த விஜயகாந்த் பின்னாளில் அதனையும் சாதித்தார்.

#image_title

வயதானதால் படங்கள் இல்லை, உடல் நலம் சரி இல்லாமல் போனதால் கட்சி பாதிக்கப்பட்டது, மக்கள் முன்னிலையில் அவர் நீண்ட நாட்களாக வராமல் இருந்தது என பல சர்ச்சைகளை அவர் சந்தித்தாலும் கூட மக்கள் அவர் மீது கொண்ட பற்றும் அன்பும் என்றென்றும் ஓயாது என்பதற்கு சாட்சி, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மட்டுமே.

Archana

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

3 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

3 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

3 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago