#image_title
கோவையை சேர்ந்தவர் ஆர். சுந்தர்ராஜன். டைரக்டர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் 80 களில் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். இயக்குனர் பாக்யராஜும் இவரும் கல்லூரி தோழர்கள். பயணங்கள் முடிவதில்லை என்ற சில்வர் ஜூப்ளி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் சுந்தர்ராஜன்.
அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், குங்குமச்சிமிழ், ராஜாதி ராஜா போன்ற படங்களை இயக்கி தன்னை முன்னணி இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டார். அதுமட்டுமின்றி பல படங்களில் ஆர் சுந்தர்ராஜன் நடித்திருக்கிறார். அமைதிப்படை, சூர்யா வம்சம், தசாவதாரம், நட்புக்காக, ஜானகிராமன், லிங்கா என பல படங்களில் அப்பா, அண்ணன், தாத்தா கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.
80 களில் விஜயகாந்துக்கு அதிக வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனர் என்றால் அது சுந்தர்ராஜன்தான். விஜயகாந்தின் மார்க்கெட்டை ரஜினி, கமலுக்கு இணையாக உயர்த்தினார். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் பொது மேடைகளில் கூட விஜயகாந்தை தாக்கிப் பேசியுள்ளார் சுந்தர்ராஜன்.
விஜயகாந்துடன் நெருக்கமான நட்பு இருந்தாலும் சுந்தர்ராஜன் அவர் நகைச்சுவையாக அவரைக் கலாய்ப்பதிலும் குறைவைக்காதவர். ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் உதவி இயக்குனர் ஒருவர் ‘விஜயகாந்தின் டூப் எங்கப்பா?’ எனக் கேட்டுள்ளார். அதற்கு சுந்தர்ராஜன் “டேய் அவன்தான் மேல இருந்து உண்மையாக் குதிக்க போறான். இவரு சும்மா குதிச்ச மாதிரி நடிக்க போறாரு. அவனப் போய் டூப்னு சொல்ற. உண்மையிலயே இவர்தான் டூப்” என விஜயகாந்தைக் கைகாட்டியுள்ளார்.
இதைக் கேட்ட விஜயகாந்த் பதிலுக்கு counter கொடுக்கும் விதமாக “அவன்தான் ஹீரோவா… அப்ப அவன வச்சே அடுத்த படத்த எடுத்துக்க” என சொல்லிவிட்டு சென்றாராம். இப்படி இரண்டு பேசும் மாறி மாறி கலாய்த்துக் கொள்வதில் வல்லவர்கள் என்கின்றனர் அவர்களோடு பழகியவர்கள்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…