விஜயபாஸ்கர் ‘ஆப்ஷன்’ க்ளோஸ்..? புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவியை பிடுங்கிய எடப்பாடி… 15 நாள் மோதல் முடிவுக்கு வந்தது..!!

Spread the love

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி, தமிழக வெற்றிக்கழக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதன் காரணமாக அவரது கட்சிப் பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டு, புதிய வடக்கு மாவட்ட செயலாளராக பழனிவேல் நியமிக்கப்பட்டார். பழனிவேல் புதுக்கோட்டை அசோக் நகரில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்தபோது, விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் திரண்டு பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு, அங்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புதிய மாவட்ட செயலாளர் பழனிவேல் அ.தி.மு.க. அலுவலகத்தின் ஆவணங்களை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசாரிடம் சமர்ப்பித்து, அலுவலகத்தைத் திறக்க அனுமதி கோரினார். இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷ் முன்னிலையில் நேற்று இருதரப்பினரையும் அழைத்துச் சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முழுமையாகப் பங்கேற்ற நிலையில், விஜயபாஸ்கர் தரப்பில் ஒரு வழக்கறிஞர் மட்டுமே கலந்து கொண்டதாலும் ஆதரவாளர்கள் வராததாலும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் அலுவலகச் சாவியைத் தங்களிடமே உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று ஆவேசமாக வலியுறுத்தினர். இந்தச் சூழ்நிலையில், நிலவி வந்த பெரும் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகச் சாவியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் சி.விஜயபாஸ்கர் தரப்பினர் முறைப்படி ஒப்படைத்துள்ளனர்.

Soundarya

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

4 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

5 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

5 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

5 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

5 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago