“20 -20 டீலுக்கு ரெடியா?”… விஜய பிரபாகரன் போட்ட அதிரடி கண்டிஷன்…. கதிகலங்கிப் போன அரசியல் களம்…!

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் அரசியல் நிலைப்பாடு குறித்துப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்ற தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன், தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசுகையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கூட்டணிகளும் சம பலத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டார். எந்தக் கூட்டணியில் தேமுதிக இணைகிறதோ, அந்தக் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் குறித்து வெளிப்படையாகப் பேசிய விஜய பிரபாகரன், தேமுதிக சார்பில் போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்துக் கட்சியின் கணக்கீடுகளை முன்வைத்தார். குறிப்பாக, கடந்த காலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 20 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 20 தொகுதிகளைத் தங்கள் கட்சி எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். இதனுடன் சீனியர் நிர்வாகிகள் மற்றும் புதுமுகங்களையும் சேர்த்து மொத்தம் 25 முதல் 30 தொகுதிகள் வரை கேட்கத் தேமுதிக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தற்போது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு அணிகளுமே தலா 170 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகக் கூறிய அவர், தேமுதிக இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். அமித்ஷா மற்றும் பியூஷ் கோயல் போன்ற பாஜக தலைவர்கள் தேமுதிகவை அணுகுவதாக வரும் செய்திகளை ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த் மறுத்துள்ள நிலையில், வரும் நாட்களில் தேமுதிக எடுக்கப்போகும் முடிவு தமிழக அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

4 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

5 மணத்தியாலங்கள் ago