Connect with us

மீனாவுக்கு எதிராக ஸ்ருதியை திருப்ப மாஸ்டர் பிளான் போடும் விஜயா…. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்…

CINEMA

மீனாவுக்கு எதிராக ஸ்ருதியை திருப்ப மாஸ்டர் பிளான் போடும் விஜயா…. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறக்கடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் விஜயா கீழே விழுந்ததை வைத்து மீனாதான் காரணம் என்று திட்டி தீர்க்கிறாள். இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி ரோகிணி விஜயாவை மீனாவுக்கு எதிராக ஏற்றி விடுகிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இனி காண்போம்.

   

இன்றைய எபிசோடில் மீனா தனது தோழிக்கு போன் செய்து அத்தை கீழே விழுந்துட்டாங்க அவங்களுக்கு கைவைத்தியம் ஒத்தடம் ஏதாவது இருந்தா சொல்லுங்கன்னு சொல்லி போன் பண்ணி கேட்கிறாள். உடனே துணி மூட்டையில் ஒத்தடத்திற்கு தேவையானவற்றை சூடு படுத்தி விஜயாவிடம் கொண்டு கொடுக்கிறாள். விஜயா மீனாவை திட்டுகிறாள். அத்தை இதுல கஷாயம் எல்லாம் ஒன்னும் குடிக்க வேண்டாம் பத்து போட்டா சரியாயிடும் என்ற சொல்லிவிட்டு ஒத்தட முட்டையை அங்கே வைத்துவிட்டு கிச்சனுக்கு செல்கிறாள். அப்போது விஜயா யாருக்கும் தெரியாமல் அந்த மூட்டையை எடுத்து ஒத்தடம் கொடுக்கிறாள். சூடு இல்லையே சூடு படுத்தினா நல்லா இருக்குமே அப்படின்னு விஜயா மெல்ல மெல்ல எழுந்து கிச்சனுக்கு செல்கிறாள்.

   

அங்கு கிச்சனில் விஜயாவிற்கு பத்து போடுவதற்காக இலைகள் எடுக்க மேலே ஏறுகிறாள் மீனா. அப்போது தடுக்கி விழுந்து விடுகிறாள். முத்து மீனாவை பிடித்து விடுகிறார். ஆனால் மேலே இருந்த மாவு டப்பாக்கள் கிச்சனுக்கு வந்த விஜயாவின் மேல் விழுந்து முழுவதுமாக மாவு ஆகிவிடுகிறது. அதை பார்த்து பயந்து விடுகின்றனர். ரோகிணி மனோஜ் ரவி ஸ்ருதி அனைவரும் விஜயாவை பார்த்து சிரிக்கின்றனர். ஸ்ருதி அத்தை இது சூப்பரா இருக்கு இத நான் ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்று சொல்லி சுருதி ஃபோட்டோ எடுத்துக்கொள்கிறாள்.

 

பின்னர் ரூமுக்கு சென்று குளித்துவிட்டு வந்த விஜயாவிடம் ரோகிணி தான் போனை கொண்டு போயிட்டு பாருங்க உங்க போட்டோவ இந்த மாதிரி ஸ்டேட்டஸ் வச்சுருக்காங்க சுருதி இது நல்லா இருக்கா இது மீனாதான் சொல்லிக் கொடுத்து ஸ்ருதி இப்படி பண்ணியிருப்பாங்க உங்க சம்பந்தக்காரங்க உங்க சொந்தக்காரங்க எல்லாரும் இத பாத்தா என்ன நினைப்பாங்க அப்படின்னு சொல்லி ஏத்தி விடுகிறாள். உடனே விஜயா இன்னைக்கு இதுக்கு நான் ஒரு முடிவு கட்டியாகணும். நீ என்கூட வா அப்படின்னு சொல்லி கூட்டிட்டு போகிறாள்.

அங்கே விஜயா தான் நடத்தி வரும் நடன பள்ளிக்கு சென்று கோபத்துடன் அமர்கிறாள். அங்கே என்ன பிளான் அத்தை என்று ரோகிணி கேட்கிறாள். அப்போது இரு கொஞ்ச நேரத்தில் உனக்கே தெரியும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கும்போதே ஸ்ருதியின் அம்மா அங்க வருகிறார். அப்போது ஸ்ருதியின் அம்மாவிடம் விஜயா உங்க பொண்ணு பண்றதெல்லாம் வரவர சரியில்ல அப்படின்னு சொல்லி போன் ஸ்டேட்டஸ் காட்டுகிறாள். காட்டிவிட்டு அவளுக்கு வர வர மரியாதையே தெரியல. என்ன ரொம்ப கோபப்படுத்திக்கிட்டே இருக்கா அப்படின்னு சொல்லுகிறாள்.

உடனே ரோகினியும் ஆன்ட்டி ஸ்ருதி நல்ல பொண்ணு தான் மீனா கூட சேர்ந்து தான் இந்த மாதிரி எல்லாம் பண்றாங்க. அதுவே இந்த மாதிரி எல்லாம் கீழே உள்ள வச்சுட்டாங்க இப்படியெல்லாம் பண்ணிட்டாங்க அப்படின்னு சொல்கிறாள். உடனே ஸ்ருதியின் அம்மா சுருதி அப்படிப்பட்ட பொண்ணு இல்ல இருந்தாலும் ஒரே பொண்ணு செல்லமா வளர்த்திட்டோம். நான் அவளை என்ன எதுன்னு கேட்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு கிளம்புகிறாள். சுருதியும் மீனாவையும் பிரிப்பதற்காகவும் மீனா ஆதரவாக இருக்க சுருதியை அவளுக்கு எதிராக திருப்புவதற்கு தான் இந்த பிளான் போட்ட அப்படின்னு விஜயா மனதிற்குள் நினைத்துக் கொள்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top