எடப்பாடிக்கு ’டாட்டா’ காட்டிவிட்டு.. தவெக-வுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்..? ரகசிய ஆலோசனையால் தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்று 3வது இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு தெரிவித்தனர். தங்களைத் தனி அணியாக அறிவிக்கக் கோரி சி.வி.சண்முகம் சபாநாயகரிடம் கடிதம் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மரகதம் குமரவேல் உட்பட 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

தவெக அமைச்சரவையில் சேர்க்க விஜய் மறுத்ததாலும், தகுதி நீக்க நடவடிக்கைக்குப் பயந்தும் எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தனர். எஸ்பி.வேலுமணி தலைமையில் நத்தம் விஸ்வநாதன், காமராஜ், தங்கமணி உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்களது பறிக்கப்பட்ட கட்சிப் பதவிகளை மீண்டும் வழங்கக் கோரி எடப்பாடியிடம் மன்னிப்புக் கடிதம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த சமரசப் பேச்சுவார்த்தையில் சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மட்டும் பங்கேற்காமல் எடப்பாடி வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்தனர்.

இந்தச் சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனது இல்லத்தில் 300க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். அவமானங்களைச் சந்தித்துக் கொண்டு அதிமுகவிலேயே தொடர்வதா, தவெகவுக்குத் தாவுவதா அல்லது அரசியலை விட்டு விலகுவதா என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எடப்பாடியுடன் மீண்டும் பயணிக்க வேண்டாம் என்றும், மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

என்னது இது..? பிளிங்கிட்டில் ஆர்டர் செய்த பொருளைப் பார்த்ததும் புத்தி மாறிய டெலிவரி பாய்.. பெண் வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!

ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…

19 seconds ago

பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படியா..? கால்வாயின் மேல்தளம் உடைந்து.. 25 மாணவர்கள் உள்ளே விழுந்த சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…

3 minutes ago

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

12 minutes ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

19 minutes ago

விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ போடும் தவெக MLA-க்கள்… அரசு அதிகாரிகளுடன் வெடித்த மோதல்… TVK அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…

24 minutes ago

“தடம் தெரியாமல் தரைமட்டமாக்குவோம்” – ஹெஸ்புல்லாவை முற்றிலுமாக அழிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி உத்தரவு..!!

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…

37 minutes ago