கரூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் பயணித்த பேருந்தின் சிசிடிவி காட்சிகளை தான் தோன்றிமலை சிபிஐ அலுவலகத்தில் விஜய் தரப்பு ஒப்படைத்தது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையில் பிரச்சார பேருந்தின் சிசிடிவி காட்சிகளை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க சிபிஐ கோரி இருந்தது. இந்நிலையில் அது தொடர்பான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை தமிழக வெற்றிக்கழகம் அலுவலகத்தில் உதவியாளர் குரு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
