தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி ஒரு வேடிக்கை விளையாட்டாக உள்ளதாகவும், சமூக ஊடகப் பொய்களைக் கொண்டு உண்மைக்கு மாறான தகவல்களைத் திரித்துப் பேசி தவெக ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். விருதுநகரில் அதிமுக ஒற்றுமைக்காகத் தீக்குளித்து உயிர்நீத்த தஞ்சை பூக்கடை K.S.மகேந்திரனின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின், கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் களத்தில் தங்களின் நேரடி எதிரியான திமுகவை மட்டுமே கவனித்து வந்ததால், அருகில் நடந்த ‘சதுரங்க வேட்டையை’ கவனிக்கத் தவறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் பரப்பப்பட்ட பொய்ப் புரட்டுகளை நம்பி மக்கள் வாக்களித்ததால், கடைசி மூன்று நாட்களில் ஏற்பட்ட அரசியல் சதுரங்க விளையாட்டினால் இந்த ஆட்சி மாற்றம் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட ராஜேந்திரபாலாஜி, தவெக பெற்ற வெற்றியைப் பிரமாண்டமாகப் பேச வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்றார்.
மக்களை உண்மையாக நேசிப்பவர்களை மட்டுமே தமிழக மக்கள் ஏற்பார்கள் என்றும், வெறும் படம் காட்டுபவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் சாடிய அவர், தற்போதைய விளையாட்டுத்தனமான ஆட்சி மக்களுக்கு விரைவில் சலிப்பை ஏற்படுத்திவிடும் எனக் கூறினார். மேலும், இவ்வளவு பெரிய அரசியல் சுனாமி அலையிலும் அதிமுகவின் வாக்கு வங்கி குலையவில்லை என்றும், அதிமுகவிற்குத் தொண்டர்கள் அளித்த வாக்குகள் சல்லடை போட்டு சலித்தெடுக்கப்பட்ட முத்துக்கள் போன்ற நிலையான வாக்குகள் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
ஆட்சியை இழந்திருந்தாலும் சோதனைகளைச் சாதனையாக்கிய சரித்திரம் அதிமுகவிற்கு உண்டு என்று தொண்டர்களுக்கு தைரியம் மூட்டிய ராஜேந்திரபாலாஜி, கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் கட்சியைத் துணிவோடு வழிநடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். தோல்விகளால் அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் துவண்டுபோக மாட்டார்கள் என்றும், புதிய இளைஞர்களின் வரவோடு இயக்கம் வலுவடைந்து வருவதால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய பலத்தோடு வரலாற்று வெற்றியைப் பெறும் என்றும் அவர் நம்பிக்கையோடு உரையை நிறைவு செய்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…