சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, கடந்த சட்டமன்ற தேர்தலில் தாங்கள் உயிரை கொடுத்து, உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்து பிரச்சாரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக 34 தொகுதிகளில் தாம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், அதில் 24 தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், திமுக கூட்டணியில் தங்களுக்கு வெறும் 4 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது மதிமுக தொண்டர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக வைகோ பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். தாங்கள் விரும்பிய சொந்தச் சின்னத்தில் போட்டியிட ஆசைப்பட்டதாகவும், ஆனால் திமுக தங்களை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமாறு நிர்பந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், சொந்தச் சின்னத்திலேயே போட்டியிட்டிருக்கலாம் என்ற ஆதங்கம் தற்போதும் கட்சியினர் மத்தியில் நிலவி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடன் தங்களை ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட வைகோ, திமுக கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மனதில் உள்ள வருத்தங்கள் மற்றும் கருத்துக்கள் பொதுக்குழுவில் பரிமாறப்பட்டு, அதன் அடிப்படையிலேயே அடுத்தகட்ட இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7…
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…
கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…
கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…
கம்மம் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த் தேஜா என்ற மாணவர், தனது…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…