சிபிஐ சம்மனை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த விஜய்…. கடைசில இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே…. செம ஷாக்கில் அரசியல் கட்சிகள்….!

By Nanthini on பங்குனி 9, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு நாளை செல்லப்போவதில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பாக விஜய் இரண்டு முறை டெல்லி சென்று விசாரணைக்கு ஆஜராகியிருந்த நிலையில், மீண்டும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கட்சிப் பணிகளை முன்னிறுத்தி அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிபிஐ இந்த வழக்கைத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக ஏற்கனவே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் விஜய் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

   

இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் நேர்காணல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த நேர்காணல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதே நாளில் சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு வர வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது.

   

இந்தச் சூழலில், திட்டமிட்டபடி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் நேர்காணல் நடத்துவதிலேயே விஜய் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, நாளை அவர் டெல்லி சிபிஐ விசாரணைக்குச் செல்ல வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. தனது அரசியல் பயணத்தில் முக்கியமானக் கட்டமாகப் பார்க்கப்படும் வேட்பாளர் நேர்காணலை விஜய் முன்னுரிமை கொடுத்து நடத்துவது அரசியல் கவனிப்பைப் பெற்றுள்ளது.