வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். படம் நீண்ட எதிர்பார்ப்பு இருப்பதால் மிக விறுவிறுப்பாக இயக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாத கடைசிக்குள் இப்ப படப்பிடிப்பு முழுமையாக முடிந்த ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
படத்தில் வில்லன் போல் தோற்றமளிக்கும் அப்பா ஒரு கதாபாத்திரமாகவும் ஹீரோ போல் இருக்கும் மகனாக ஒரு கதாபாத்திரமாகவும் டபுள் ஆப்ஷனில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
தற்போது ஏப்ரல் மாதத்துடன் கடைசி படப்பிடிப்பும் முடியும் நிலையில் அந்த ஷூட்டிங்கை கேரளாவில் வைத்து எடுக்க உள்ளதாக தகவல் கசிந்திருந்தது. தற்போது இதற்காக விஜய் அவர்கள் நெய்வேலி மற்றும் கேரளாவில் உள்ள திருமணமந்தபுரத்திற்கு கோட் படம் சூட்டிங்காக சென்று உள்ளார். விஜய் அங்க வந்துள்ளார் என்று தெரிந்தவுடன் மாபெரும் ரசிகர் பட்டாளமே விமான நிலையத்தை சுற்றி வளைத்து விட்டார்கள். முதலில் இலங்கையில் வைத்து தான் கிளைமாக்ஸ் ஷூட் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் சில பல பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் ஆன சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து சூட் செய்ய அனுமதி கேட்டு உள்ளார்கள். தற்போது IPL நடந்து கொண்டிருப்பதால் படப்பிடிப்பிற்கான அனுமதி கிடைக்க வில்லையாம், அதனால்தான் 14 வருடம் கழித்து கேரளா சென்றுள்ளார் விஜய். திருவனந்தபுரத்தில் இருக்கும் கிரிக்கெட் மைதானம் தான் சேப்பாக்கம் மைதானத்திற்கு சமமான ஒரு நல்ல மைதானம் என்று அங்கு படப்பிடிப்பு எடுக்க சென்றிருக்கிறார்கள் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
View this post on Instagram