‘காக்க காக்க’ படமே விஜய்க்காக எழுதப் பட்டது தானாம்… குறுக்க புகுந்து கெடுத்தது யார் தெரியுமா..? பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் இயக்குனர் கௌதம் மேனன் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வந்தார். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன.

அவர் எழுதி இயக்கிய மின்னலே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அடுத்து ஆக்‌ஷன் கதையான போலீஸ் கதை ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த கதையை தினம்தோறும் பட இயக்குனர் நாகாராஜுடன் இணைந்துதான் எழுதியுள்ளார். இந்த கதை முழுவதையுமே அவர்கள் இருவரும் விஜய்யை மனதில் வைத்துதான் எழுதியுள்ளனர். இதற்காக பிரபல தயாரிப்பாளர் மூலமாக விஜய்யை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

   

அப்போது விஜய் காலேஜ் செல்லும் ஜாலியான இளைஞன் வேடங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையொன்றில் அவர் அப்போது நடித்திருக்கவில்லை. அதனால் மிடுக்கான போலீஸ் வேடம் அவருக்கு சிறப்பாக இருக்கும் என இருவரும் நினைத்துள்ளனர்.

அப்போது விஜய்க்கு கதை கேட்டு தேர்வு செய்யும் பொறுப்பில் இருந்தவர் அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன்தான். அவர் முழுக் கதையையும் கேட்ட பிறகு “இந்த கதையின் இறுதியில் ஹீரோ தோற்றுவிடுவது போல இருக்கிறதே. அது எனக்குப் பிடிக்கவில்லை. எப்படி இருந்தாலும் ஹீரோ ஹீரோயினைக் காப்பாற்றி இருக்க வேண்டும்” எனப் பலக் கரெக்‌ஷன்களை கூறியுள்ளார்.

அதனால் இந்த படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். விஜய்யின் அப்பா கதை பிடிக்கவில்லை என சொன்னவுடனேயே சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் கௌதம் மேனனுக்காக போட்டுகொடுத்த அலுவலகத்தை காலி செய்ய சொல்லிவிட்டாராம். அதன் பின்னர்தான் அந்த கதையில் சூர்யா, ஜோதி கா மற்றும் தயாரிப்பாளர் தாணு எல்லாம் வந்தார்களாம்.

ஒருவேளை இந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் அவரின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக அமைந்திருக்கும். ஆனால் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சூர்யாவுக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.

author avatar