‘ஈகோ எனக்கு பிடிக்காது’… இனிமே இந்த வேலை வச்சிக்கக்கூடாது…. “விஜய்க்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்”… நள்ளிரவில் பறந்த எச்சரிக்கை…..!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சியில், வெளியே தெரியாத அளவுக்கு கடுமையான ஒரு பனிப்போர் புகைந்து கொண்டிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கும், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கும் இடையே நிலவி வரும் இந்த முட்டல் மோதல்தான் தவெக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே தற்போதைய முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. தென் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரு பெண் அமைச்சர்களின் ஈகோ யுத்தம் கட்சித் தலைமை வரை எட்டியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் இதனால் கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மோதலுக்கு முக்கியக் காரணியாக அமைந்திருப்பது மாவட்ட அரசியல் ஆதிக்கம்தான். அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகிய இருவருமே விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ‘மாவட்டத்தின் அதிகாரப்புள்ளி யார்?’ என்ற கேள்வியோடு ஒருவரை ஒருவர் மட்டம் தட்டும் வேலைகளில் இறங்கியுள்ளனர். அரசு நிகழ்ச்சிகளில் அதிகாரிகளின் முக்கியத்துவம், அழைப்பிதழ்கள் மற்றும் போஸ்டர்களில் யாருடைய பெயர் முன்வரிசையில் தடிமனாக (Bold) இடம் பெற வேண்டும், கட்சியில் யார் சீனியர்-ஜூனியர் என்பதில் தொடங்கி அடுக்கடுக்கான அதிகாரப் போட்டி அரங்கேறி வருகிறது. இதனால் விருதுநகர் மாவட்ட அரசு அதிகாரிகளும், தவெக கட்சி நிர்வாகிகளும் யாருக்கு ஆதரவாகச் செயல்படுவது என்று தெரியாமல் இடியாப்பச் சிக்கலில் மாட்டித் தவித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த இரு அமைச்சர்களும் இணைந்து செல்ஃபி எடுத்து, தங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது போலக் காட்டிக்கொண்டாலும், அது வெறும் கண்துடைப்புதான் என்றும், உள்ளுக்குள் மோதல் நாம் நினைப்பதை விட மிக மோசமாக இருப்பதாகவும் அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு பெண் அமைச்சர்களின் இந்த எல்லை மீறிய ஈகோ யுத்தம், ஆட்சிக்கும் கட்சிக்கும் கெட்டப் பெயரை உருவாக்குகிறது என்பதை மாநில உளவுத்துறையினர் கவனித்து, இதுகுறித்த விரிவான அறிக்கையை முதல்வர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து, தவெக-வில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

உளவுத்துறை அறிக்கையால் அதிருப்தியடைந்த முதல்வர் விஜய், கட்சியின் முக்கிய நிர்வாகியான அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் இதுகுறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “தென்மாவட்ட பெண் அமைச்சர்களின் நடத்தை சரியில்லை, ஈகோயிஸ்ட்டாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை என அவர்களிடம் எச்சரிக்கையாகச் சொல்லிவிடுங்கள்” என்று விஜய் உத்தரவிட்டுள்ளார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அமைச்சர் ஜெகதீஸ்வரியை புஸ்ஸி ஆனந்தும், அமைச்சர் கீர்த்தனாவை ஆதவ் அர்ஜுனாவும் பரிந்துரை செய்திருந்தனர். தங்களது ஆதரவாளர்களின் இந்த மோதலைச் சமரசம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தவெக சீனியர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், விஜய்யின் இந்த அதிரடி எச்சரிக்கை தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

திமுகவை விட்டு வந்ததே தப்பா போச்சு?… குரலை இழந்த காங்கிரஸ், விசிக – தவெக கூட்டணியில் நடப்பது என்ன?…. அதிர்ச்சியில் தமிழக அரசியல் களம்…!

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், தன் கூட்டணிக் கட்சிகளுக்குத் தகுந்த முக்கியத்துவமும் ஊடக வெளிச்சமும் வழங்கி, அவர்களைத் தேசிய மற்றும் மாநில…

1 minute ago

நள்ளிரவில் மர்மம்…! தாயின் சடலத்தை தோண்டி எடுத்து கடத்திய மகன்கள்… நடந்தது என்ன…? கர்நாடகாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் மாலேபென்னூர் பகுதியைச் சேர்ந்த ஈரம்மா (58) என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்த நிலையில்,…

3 minutes ago

“அப்பா கொஞ்சம் பேசாம இருங்க”…. வைகோவுக்கு துரை வைகோ போட்ட திடீர் கண்டிஷன்… விஜய் கொடுத்த மிகப்பெரிய அதிர்ச்சி… பின்னணியில் பரபரப்பு உண்மை…!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அண்மைக்காலப் பேச்சுகள், அவர் அங்கம் வகிக்கும் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.…

8 minutes ago

“அம்மாவை விடுப்பா…” கதறி அழுத பிள்ளைகள்…! ஆத்திரத்தில் கணவர் செய்த காரியம்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. நடுங்க வைக்கும் சம்பவம்…!!

சேலம் மாநகர் களரம்பட்டி சலவையாளர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் ஜெயந்தி (40) தம்பதியினர், குகை பகுதியில் சொந்தமாகச்…

15 minutes ago

திடீரென ரத்தாகும் ஆயிரக்கணக்கான டெண்டர்கள்… விஜய் ஒரே முடிவில் ஆடிப்போன அரசு இயந்திரம்…. பகீர் கிளப்பும் பின்னணி உண்மை…!

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் கடந்த ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிகளுக்கான ஆணைகளை ரத்து செய்து, திட்டங்களின்…

22 minutes ago

‘ஜனநாயகன்’ பார்த்து அழுத தவெக அமைச்சர்…! கலாய்த்துத் தள்ளிய ப்ளூ சட்டை மாறன்… சோசியல் மீடியாவில் வெடித்த புதிய சர்ச்சை…!!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகளவில் வெளியாகிக் திரையரங்குகளில் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், திரையரங்கில் படத்தைப் பார்த்த தவெக…

49 minutes ago