பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டார். சௌந்தர்யா இரண்டாவது இடம் பிடித்தார். மூன்றாவது இடத்தை விஷால் பிடித்தார். போட்டியாளர் விஷாலும் அன்ஷிதாவும் காதலிப்பதாக ஒரு பேச்சு ரசிகர்கள் மத்தியில் உலா வருகின்றது. அதற்கு ஏற்றாற்போல பிக் பாஸ் பினாலே மேடையில் அன்ஷிதா தான் ஏற்கனவே காதலித்து வந்த நபரை பிரேக் அப் செய்து விட்டதாக கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு நான் அந்த நபரிடம் எப்போதும் கெஞ்சிக் கொண்டுதான் இருப்பேன். ஆனால் பிக் பாஸ் வீடு எனக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது. அந்த நபர் இனிமேல் என்னுடைய வாழ்க்கையில் தேவையில்லை என்ற மனநிலையை கொடுத்தது என்றும் கூறியிருந்தது இன்னும் சந்தேத்தகத்தை ஏற்படுத்தியது. மேலும் நிகழ்ச்சி முடிந்ததும் விஷால், அன்ஷிதா இருவரும் ஒன்றாகவே சுற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் விஷால் அளித்துள்ள பேட்டியில், தர்ஷிகா realize பண்ணி ஒரு விஷயத்தை என்னிடம் சொல்லும்போது அவங்க என்னை நினைச்சாங்க. அப்போ அன்ஷிதா என்னிடம் இது வெளிய வேறு மாதிரி போகப்போகுதுன்னு சொன்னா. நான் சொன்னேன் இல்ல டி நாங்க ரெண்டு பேரும் பேசிட்டோம். அந்த மாதிரி எதுவுமே கிடையாது.

நாங்க clear ஆ இருக்கோம். ஆனால் உள்ளே பீலிங்க்ஸ் இருந்தது. ஆனா தர்ஷிகா ஒரு பொண்ணா ஒரு ஷோவுல லவ் சொல்லுறப்போ எழுந்து நின்னு தான் சலியுட் அடிக்கணும். என்னால ஒரு பொண்ணு பாதிக்கப்பட்டிருக்காங்கனு நினைக்கும்போது கஷ்டமா இருந்துச்சி. நாங்க வெளியில் வந்து இன்னும் பேசிக்கல. எனக்கு உள்ள இருந்தவரைக்கும் அசினு எனக்கு ரொம்ப close. நாங்க நிஜமாவே நல்ல நண்பர்கள் தான்.
