தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது வசிப்பிடத்தை பனையூரிலிருந்து சென்னை நகருக்குள் மாற்ற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் முதலமைச்சராகப் பதவியேற்றதும், பட்டினப்பாக்கம் அல்லது அடையாறு பகுதியில் உள்ள வீட்டில் குடியேறுவார் என்று கூறப்படுகிறது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில், தலைமைச் செயலகத்திலிருந்து பனையூர் வரை ஒவ்வொரு முறையும் பயணிப்பது அதிக நேர விரயத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காலத்தின் முக்கியத்துவத்தைக் கருதி, நிர்வாகப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள ஏதுவாக அவர் சென்னை நகருக்குள் தனது வசிப்பிடத்தை மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
