“ராகுல் காந்தியை கடுப்பேற்றிய சிதம்பரம்”…. டெல்லியில் வெடித்த உச்சக்கட்ட பஞ்சாயத்து… விஜய் போட்ட சீக்ரெட் பிளான்…. அடுத்த பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 5, 2026

Spread the love

தமிழக அரசின் முக்கிய உச்சநீதிமன்ற வழக்குகளில் ஆஜராவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வழக்கமாக மாநில காங்கிரஸின் முக்கிய முடிவுகளும் நியமனங்களும் தேசிய தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டே இறுதி செய்யப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமைக்கு முன்கூட்டியே எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்ற செய்தி, டெல்லி மேலிடத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அரசாணை வெளியானதுக்கு பின்னரே இந்த விஷயம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மூலம் ராகுல் காந்தியின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராகுல் காந்தி, இது குறித்து ப. சிதம்பரத்திடம் விசாரிக்குமாறு கூறியுள்ளார். “அரசாணை வந்த பிறகே எனக்கே விஷயம் தெரியும்” என்று ப. சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுதான் என்பது அவரது ஆதரவாளர்கள் தரப்பிலேயே பேசப்படும் தகவல்கள் மூலம் வெளிச்சத்திற்கு வர, ராகுல் காந்தி கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

   

இருப்பினும், இந்த விவகாரத்தை ப. சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் இயல்பான ஒன்றாகவே பார்க்கின்றனர். “தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றத்தில் சட்ட ரீதியாகப் வலுவாகப் போராடக் கூடிய ஆளுமை தேவைப்படுகிறது. முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய ப. சிதம்பரத்தின் அனுபவம் அரசிற்குப் பெரிதும் உதவும் என்பதால், சரியான நபரே நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்று அவர்கள் நியாயப்படுத்துகின்றனர். மேலிடத்தின் அனுமதியின்றி இத்தகைய தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுவதாக எழும் விமர்சனங்களை அவர்கள் மறுக்கின்றனர்.

   

ஏற்கனவே பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தவெகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராகக் காங்கிரஸ் முன்னிறுத்த, தமிழக வெற்றிக் கழகத்தினரோ விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி வருகின்றனர். இதற்கிடையே, “தவெகவினர் இன்னும் ரசிக மனநிலையிலேயே இருக்கிறார்கள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில், சிதம்பரம் நியமன விவகாரமும் சேர்ந்து இருதரப்பு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.