தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சீரியல்களுக்கு இடையே எப்போதுமே கடுமையான போட்டி நிலவும். டி ஆர் பி யில் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது சீரியல்களை அனைத்து சேனல்களும் ஒளிபரப்பு செய்து வருகின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சீரியல்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு அதிகமாக இருக்கும். ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பொருத்தவரை எப்போதுமே விஜய் டிவி தான் கில்லி. இதற்கு காரணம் அந்த சேனலில் இருக்கும் தொகுப்பாளர்கள் தான். குறிப்பாக மாகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.
இவர்கள் இருவருமே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் மற்றும் கலகலப்பாக பேசுவது என ரசிகர்களை மீண்டும் நிகழ்ச்சியை பார்க்கத் தூண்டும். இப்படியான நிலையில் விஜய் டிவியில் ஐந்து பிரபலமான நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுவதோடு அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களையும் வெளியே அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் பிரியங்கா மற்றும் கோபிநாத் போன்றவர்கள் இந்த லிஸ்டில் இருக்கிறார்கள் என்று சொன்னால் அதனை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் டிவிக்கே மாறியது குறித்து சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது.
ஆனால் விஜய் டிவியே ஒட்டுமொத்தமாக கைமாறப்போவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது விஜய் டிவியை கலர்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக வாங்க திட்டமிட்டுள்ளது. உலக அளவில் சிறந்த கார்ப்பரேட் நிறுவனம் என்பதால் இந்த கலர்ஸ் விஜய் டிவியின் பல பழைய நிகழ்ச்சிகளை முடித்து வைக்க முடிவு செய்துள்ளது. அதில் நீயா நானா மற்றும் சூப்பர் சிங்கர் போன்ற அரைத்த மாவையே அரைக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் முடிவுக்கு வர உள்ளன.
பார்த்த முகத்தையே பார்க்க வேண்டாம் என்ற முடிவில் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்த தொகுப்பாளர்களையும் நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் பிரியங்காவுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் இவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக தற்போது வெளியாகி உள்ள இந்த செய்தி விஜய் டிவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'Happiest Places to Work' விருதுகள், வெறும் லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு ஒரு…
தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…