சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அண்ணாமலை விஜயாவிடம் பேச வேண்டும் என்பதற்காக முத்து பாட்டியை வீட்டிற்கு அழைத்து வருகின்றார். பாட்டியை பார்த்த போனவாரம் தானே வந்தீங்க என்று கேட்கின்றார். உடனே பாட்டியும் ஏன் நான் வரக்கூடாதா என்று கேட்கின்றார். பின்னர் அண்ணாமலை எங்கே என்று கேட்டுவிட்டு மாடிக்கு செல்கின்றார்.

அண்ணாமலையை பார்த்து பேசுகின்றார். நீ என்ன சின்ன குழந்தையா பொண்டாட்டி கூட சண்டை போட்டு பேசாமல் இருப்பதற்கு, பசங்க முன்னாடி நீங்க இருவரும் இப்படி பேசாம இருந்தா எப்படி நல்லா இருக்கும். ஏதாவது பொண்டாட்டியிடம் பிரச்சனை என்றால் பேசாமல் இப்படித்தான் இருப்பாங்களா? அவங்களுக்கு நீ ஒரு பாடமா இருக்கக் கூடாது .உடனே வந்து விஜயவிடம் பேசு என்று கூட்டிட்டு வருகின்றார்.
அதன்பிறகு விஜயாவிடம் நீ பண்ணதும் தப்புதான் உடனே அண்ணாமலையிடம் மன்னிப்பு கேளு என்று கேட்க அவர் மீனாவிடம் மன்னிப்பு கேட்க கூறுகின்றார். உடனே பாட்டி அதெல்லாம் வேண்டாம் அப்படி செஞ்சா நீ மறுபடியும் விஜயா மீனாவை கொடுமைப்படுத்த ஆரம்பிச்சிடுவா அப்படி என்று அண்ணாமலைக்கு சொல்லி புரிய வைக்கின்றார். பிறகு விஜயாவும் அண்ணாமலையிடம் நான் செய்தது தப்புதான் என்று மன்னிப்பு கேட்கின்றார்.
இருந்தாலும் உன் புருஷனுக்கு தெரியாமல் நீ பண்ணி இருக்கக் கூடாது என பாட்டியும் அவரை திட்டுகின்றார். பிறகு மனோஜ் வருகின்றார். மனோஜை ஓங்கி ஒரு அடி கொடுக்கின்றார் பாட்டி. படிச்சவன் தானே நீ எப்படி இருக்கணும் தெரியாதா? என்று திட்டுகின்றார். மனோஜை அவங்க அம்மாதான் செல்லம் கொடுத்து இந்த அளவுக்கு கெடுத்து வெச்சிருக்கான்னு பார்த்தா நீயும் அதே வேலையை தான் பண்றா என்று ரோகினியையும் சேர்த்து திட்டுகின்றார்.

அவன் தப்பு பண்ணுகிறான் என்று தெரிந்தால் அவனை கண்டிப்பதை விட்டுவிட்டு அவனுக்கு சப்போர்ட் பண்ணுகிறாய் என்று திட்டுகின்றார். பின்பு முத்து ஒரு ஐடியா கூறுகின்றார். மனோஜ்க்கு பொறுப்பு வரவேண்டும் என்றால் அப்பாவுக்கு கொடுக்க வேண்டிய 27 லட்சம் பணத்தை மாதம் 50000 கொடுத்து சரி கட்ட வேண்டும். அப்போதுதான் அவருக்கு அறிவு வரும் என்று கூற பாட்டியும் அது நல்ல யோசனை என்று கூறுகின்றார். உடனே விஜயாவிடம் சொல்லி உன் பையனிடம் சொல்லி இதற்கு சம்மதிக்க சொல்லு என்று கூறுகின்றார். இப்படித்தான் இன்றைய எபிசோட் முடிகின்றது.
