#image_title
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கப் போகின்றது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
முத்து விரித்த வலையில் விஜயாவும் மீனாவும் சிக்கிக் கொண்டார்கள். சாமியாரிடமிருந்து அவர்கள் புதிதாக எலுமிச்சம் பழத்தை வாங்கிக் கொண்டு வைத்த போதிலும், அவர்களுக்கு திருப்தி அடையவில்லை. எப்படியாவது அந்த எலுமிச்சம்பழத்தை எடுத்து விட வேண்டும். தங்களுக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்கள். இதனால் இருவரும் இரவு தூங்காமல் முழித்துக் கொண்டிருந்தார்கள்.
பின்னர் இரவு அனைவரும் தூங்கிய பிறகு திருட்டுத்தனமாக பூஜை அறைக்கு சென்று அந்தப் எலுமிச்சை பழத்தை வெளியில் எடுத்து வரும்போது முத்து லைட்டை போட்டு விடுகின்றார். அனைவரும் ஹாலுக்கு வந்து விடுகிறார்கள். அப்போது என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பும்போது இதுபோன்ற பொருட்களை எல்லாம் வீட்டில் கொண்டு வந்து வைத்தால் எங்களுக்கு எல்லாம் பயமாக இருக்காது.
#image_title
அதனால் தான் அதை தூக்கிப்போட முயற்சி செய்தோம் என்று சமாளிக்கின்றார் விஜயா. இருந்தும் முத்து இதை பகல் நேரத்தில் செய்யாமல் ஏன் திருட்டுத்தனமாக நடுராத்திரியில் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க அப்போது ரோகிணி உடனே பூஜை அழைத்துக் கொண்டு செல்லப் பார்க்கின்றார். அப்போது அவர்களை தடுத்து நிறுத்து செய்ய முத்து அக்யூஸ்ட் எங்கு அழைச்சிட்டு போறீங்க என்று கூறுகிறார்.
பின்னர் அண்ணாமலை அவரை அதட்டி கேட்கின்றார். உடனே மனோஜ் நடந்த விஷயத்தை அண்ணாமலையிடம் ஒப்படைத்து விடுகின்றார். ஆமாம் நான் தான் மீனாவின் நகையை எடுத்துக்கொண்டு கவரிங் நகையை கொண்டு வந்து வைத்தேன். இதை கேட்டதும் மிகுந்த கோபமடைந்த அண்ணாமலை மனோஜை அடிக்கின்றார். விஜயா தடுக்க வரும்போதும் அண்ணாமலை இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
என்னிடம் இனி மூஞ்சி கொடுத்து கூட பேசாதே என்று கூறி விடுகின்றார். இப்படி இருக்கும் சூழலை மாற்ற விஜயா உடனே ஒரு ட்ராமாவை போடுகின்றார். நீங்கள் என்னிடம் பேச மாட்டீங்களா? அப்படி என்றால் நான் ஏன் இருக்கணும் என்று ரூமுக்குள் போய் கதவை சாத்துகிறார். அங்கு போய் ஒன்னும் பண்ணாமல் விஜயா சும்மாதான் இருக்கின்றார்.
இருப்பினும் வெளியில் இருப்பவர்கள் அனைவரும் அம்மா ஏதாவது செய்யப் போகிறார்களோ? என்ற பயத்தில் கதவை தட்டுகிறார்கள். வழக்கம்போல் முத்து ஒன்னும் பண்ண முடியாது ஏமாற்றத்துடன் இருக்கின்றார். மீனாவும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் நகையை விட்டுவிட்டு இருக்கின்றார். விஜயா எப்போதும் மனோஜ் தப்பு செய்யும் போதெல்லாம் காப்பாற்ற விடுகின்றார். இதில் ஏமாற்றம் அடைவது முத்துவும் மீனாவும் தான். தற்போது தங்களது நகைகளை இழந்து விட்டு நின்று இருக்கிறார்கள். இன்றைய எபிசோடு இப்படித்தான் முடிவடைகிறது.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…