விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்தது. ஆறாம் தேதி முதல் பிக் பாஸ் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனை பிரபல நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

இரவு 9:30 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பதால் விஜய் டிவி சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் மகாநதி, நீ நான் காதல், சின்ன மருமகள், பனி விழும் மலர் வனம், வீட்டுக்கு வீடு வாசப்படி ஆகிய சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் பனி விழும் மலர்வணம் சீரியல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பானது.

அந்த சீரியல் இப்போது மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதனை அடுத்து வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பானது அக்டோபர் ஏழாம் தேதியில் இருந்து அந்த சீரியல் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. சின்ன மருமகள் சீரியல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பானது. இனி மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

மகாநதி சீரியல் 7 மணிக்கு ஒளிபரப்பானது. இனி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. நீ நான் காதல் சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது. அந்த சீரியல் இனிமேல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. வருகிற ஏழாம் தேதி முதல் மேற்கூறிய சீரியல்கள் புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#image_title
