சேலையில் வித விதமாக போஸ் ரசிகர்களை ஈர்க்கும் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..

By Mahalakshmi

Published on:

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி  தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்
எப்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருப்பார். தற்போது சேலையில் குடும்பப் பெண் போல விதவிதமாக புகைப்படத்தை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் பரவி வைரலாகி வருகிறது.

   

சினிமா துறையில்  நடிகை ரேஷ்மா விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காகவே பிரபலமடைந்தார். இவர் சினிமாத் துறைக்கு வருவதற்கு முன்னர் விமான பணிபெண்ணாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் கோபிக்கு இரண்டாவது மனைவியாக  ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கு நல்ல மார்க்கெட்டிங் இருந்து வருகிறது; மேலும்  ரசிகர் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்ற கதாபாத்திரமாகவே இருக்கின்றது.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி மாடல் உடை அணிந்தும் சேலையிலும் போட்டோ ஷூட் எடுத்து பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அதுபோலவே தற்போது சேலையில் விதவிதமான போஸ்கள் கொடுத்து போட்டோ சூட் எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது.

author avatar
Mahalakshmi