#image_title
சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் இளம் நடிகர் நடிகைகள் சின்னத்திரையில் இருக்கும் நட்சத்திரங்களை திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்த நிலையில் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பான ’நீ நான் காதல்’ என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர், சினிமா நடிகையை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல் ‘நீ நான் காதல்’. இந்த சீரியலில் பிரேம் ஜேக்கப் என்பவர் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரேம் ஜேக்கப் கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஸ்வாசிகாவை காதலித்து வந்த நிலையில் தற்போது அவரை திருமணம் செய்து கொண்டார். இருவீட்டார் பெற்றோர்கள் சம்மதத்துடன் கேரளாவில் நடந்த இந்த திருமணத்திற்கு ஏராளமான திரையுலகினர் மற்றும் சின்ன திரையுலகினர் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகை ஸ்வாசிகா ‘வைகை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் அதன் பின்னர் ’கோரிப்பாளையம்’ ’சாட்டை’ ’அப்புச்சி கிராமம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாள திரைப்படங்களில், சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…