பிரபல சினிமா நடிகையை கரம்பிடித்த ‘நீ நான் காதல்’ சீரியல் ஹீரோ.. இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படங்கள்..

By Mahalakshmi

Updated on:

சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் இளம் நடிகர் நடிகைகள் சின்னத்திரையில் இருக்கும் நட்சத்திரங்களை திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்த நிலையில் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பான ’நீ நான் காதல்’ என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர், சினிமா நடிகையை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

   

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல் ‘நீ நான் காதல்’. இந்த சீரியலில் பிரேம் ஜேக்கப் என்பவர் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரேம் ஜேக்கப் கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஸ்வாசிகாவை காதலித்து வந்த நிலையில் தற்போது அவரை திருமணம் செய்து கொண்டார். இருவீட்டார் பெற்றோர்கள்  சம்மதத்துடன் கேரளாவில் நடந்த இந்த திருமணத்திற்கு ஏராளமான திரையுலகினர் மற்றும் சின்ன திரையுலகினர் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகை ஸ்வாசிகா ‘வைகை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் அதன் பின்னர் ’கோரிப்பாளையம்’ ’சாட்டை’ ’அப்புச்சி கிராமம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாள திரைப்படங்களில், சீரியல்களில் நடித்து வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Mahalakshmi