விஜய் டிவி நாஞ்சில் விஜயனுக்கு முடிந்தது திருமணம்…  மணப்பெண் இவர் தானா?… wedding கிளிக்ஸ்…

By Begam on புரட்டாதி 3, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் இடையே பெரும் மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி ‘சிரிச்சா போச்சு’. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரும் கஷ்டத்தில் இருப்பவர்களின் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் நாஞ்சில் விஜயன்.

   

மேலும் இவர் பெருமளவில் பெண் வேடமிட்டு காமெடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று தனது திறமையை நிரூபித்தார். தற்பொழுது இவர் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்.

   

 

இவர் தனது விடாமுயற்சியால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைக்க சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதேசமயம் பல விமர்சனங்களை முன்வைத்து அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கி மாட்டிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். தற்போது அவருக்கு திருமணம் நடந்துள்ளது. இத்திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.