
TRENDING
மாளிகை மாதிரி வீட்டை கட்டி பலரையும் வாயடைக்க வைத்த விஜய் டிவி மாகாபா ஆனந்த்… வைரலாகும் ஹோம் டூர் வீடியோ..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான மற்றும் முன்னணி தொகுப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர்தான் மா கா பா ஆனந்த். இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கா உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றார்.
இவர் முதன் முதலில் அது இது எது என்ற நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியில் நுழைந்த நிலையில் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முதலில் வானவராயன் வல்லவராயன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாகாபா ஆனந்த் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் இறுதியாக சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் மாகாபா ஆனந்தின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
மேலும் தன்னுடைய வீட்டின் டூர் வீடியோவையும் மாகாபா ஆனந்த் தனது youtube சேனலில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.