விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி தான் இப்போது பரபரப்பாக பேசுகிறார்கள். குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் தொகுப்பாளனியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மணிமேகலை.
அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா போட்டியாளராக பங்கேற்றார். இருவருக்கும் மேற்பட்ட மன கசப்பு காரணமாக மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டார். இது பற்றி தான் இப்போது பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் டிவி தொகுப்பாளர்களின் சம்பளம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
பல ஆண்டுகளாக நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வேலை பார்க்கும் கோபிநாத்துக்கு ஒரு எபிசோடுக்கு 5 லட்ச ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மாகாபா ஆனந்திற்கு சம்பளம் ஒரு எபிசோடுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனை அடுத்து ரக்ஷனுக்கு ஒரு எபிசோடுக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறதாம்.
மக்கள் மனதில் இடம் பிடித்த மணிமேகலைக்கு 60 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை சம்பளம் வழங்குவதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளனியாக வேலை பார்க்கும் பிரியங்காவுக்கு ஒரு எபிசோடுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.