தமிழக வெற்றி கழகம் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எதிர்கால தமிழகம், இளைஞர்களின் எழுச்சி நாயகன், மக்கள் எழுச்சியோடு எதிர்காலத்தை உருவாக்க இருக்கும் விஜய். ஈரோட்டில் வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். வாரி மகால் அருகே இருக்கும் தனியாரிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு உரிய அனுமதி கிடைத்ததும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளோம். ரோடு ஷோ தவிர்க்கப்பட்டுள்ளது. தனியாரிடம் தேர்வு செய்து நிகழ்ச்சி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மக்களின் சக்தியே விஜயை அரியணையில் அமர்த்தும். மூத்த தலைவர் என்பதால் மற்றொரு கட்சி பற்றி பேசக்கூடாது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
