தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றார். சமீபத்தில் கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு அரசியலில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இருந்தாலும் அதனை சட்டரீதியாக கையாண்டு வரும் விஜய் தனது கட்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். அதேசமயம் கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் வருகின்ற டிசம்பர் மாதத்தில் சேலத்தில் தனது தேர்தல் பரப்புரையை மீண்டும் விஜய் தொடங்க உள்ளார்.
இந்நிலையில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் என்ற தலைப்பில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நாளை நவம்பர் 23 பங்கேற்க உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜே பி ஆர் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அழிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது.
