தனது திருமண நாளில் விஜய் எடுத்த முக்கிய முடிவு… எப்படி இருக்கப்போகுதோ… தமிழகமே எதிர்பார்ப்பில் ..!!

By Soundarya on ஆடி 16, 2025

Spread the love

நடிகர் விஜய் தற்போது அரசியலில் களம் இறங்கியுள்ளார். இதனால் சினிமாவில் இருந்து முழுமையாக விலகுவதற்கு முடிவெடுத்துள்ளார். ஜனநாயகன் படம் தான் கடைசி படம் என்றும் அறிவித்துள்ளார். இந்த படம் அடுத்த பொங்கல் பண்டிகைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் விஜய்- சங்கீதா குறித்து பலவிதமான வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் அவை யாவும் உண்மையல்ல என்று பத்திரிகையாளர்கள் பலரும் விளக்கம் அளித்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் விஜய் வழக்கம் போல தன்னுடைய ஸ்டைலில் வதந்திகளுக்கு விளக்கம் அளிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய திருமண நாளன்று ஒரு முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. முதல் மாநாடு ஏற்கனவே விக்கிரவாண்டியில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இதனை தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார்.