தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது. இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் விஜய் நடைபயணம் செய்து மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஆளும் கட்சி தரப்பிலிருந்து அவரது நடை பயணத்திற்கு அனுமதி கிடைப்பது முடியாத காரியம் எனவும் பலரும் கூறி வருகிறார்கள். விஜய் அவரது நடை பயணத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பல சவால்களை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும்…
தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…
பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…
சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் விஜய்யின் தமிழக…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…