“எம்.எல்.ஏ-க்கள் சொன்னா செல்லாது”…. விஜய் பிரதமர் விவகாரத்தில் அமைச்சர் வெங்கடரமணன் போட்ட திடீர் ‘யூ-டர்ன்’… பரபரப்பு பேட்டி…!

Spread the love

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தவெக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ கனிமொழி, 2029-ஆம் ஆண்டில் விஜய்தான் அடுத்த பிரதமர் என்றும், ராகுல் காந்தியே அவரைப் பிரதமராக அமர வைப்பார் என்றும் கூறியிருந்தார். இதற்கு உடனடியாகப் பதிலளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட், ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என்றும் தவெகவினர் இன்னும் ரசிகர் மனநிலையிலேயே இருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக பொருளாளரும் உணவுத்துறை அமைச்சருமான வெங்கடரமணன் இதற்குக் விளக்கமளித்தார். தவெக எம்.எல்.ஏ-க்கள் விஜய்யைப் பிரதமர் எனப் பேசுவது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும், அது அவர்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே என்றும் கூறினார். முதல்வர் விஜய்யோ, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தோ அல்லது அமைச்சர்களோ இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கவில்லை என்றும், எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தலைவர் மீது கொண்ட அபரிமிதமான அன்பினாலும் ஆசையினாலும் இவ்வாறு பேசுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஊழலற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான ஆட்சியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் எம்.எல்.ஏ-க்கள் இவ்வாறு விரும்புவதாகத் தெரிவித்த அமைச்சர், தேசிய அளவிலான செயல்பாடுகள் குறித்து வரும் காலங்களில் முதல்வரோடும் பொதுச்செயலாளரோடும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார். மேலும், 2029 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் நிறையக் காலம் இருப்பதால், பிரதமர் வேட்பாளர் குறித்துத் தகுந்த நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என மழுப்பலாகப் பதிலளித்துச் சென்றார்.

முன்னதாக, ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம் என காங்கிரஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும், மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கூட்டணிக்குள் மீண்டும் வெடித்துள்ள இந்த பிரதமர் வேட்பாளர் விவாதம், தவெக – காங்கிரஸ் இடையிலான உறவில் தொடர் உராய்வை ஏற்படுத்தி வருகிறது.

Nanthini

Recent Posts

“காவலர்களுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு”….. சட்டப்பேரவையில் CM விஜய் வெளியிட்ட மெகா மாஸ் அறிவிப்புகள்…. இதோ முழு விவரம்…!

தமிழக சட்டமன்றத்தில் இன்று உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர்…

4 minutes ago

“கறிக்கடையில் கூட இப்படி வெட்ட மாட்டாங்க”…. 116 நாட்களில் 10 ஆணவக் கொலைகள்?… சட்டசபையில் பொங்கி எழுந்த உதயநிதி… அலறிய பேரவை….!

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

22 minutes ago

‘சினிமா முடிந்தது… அடுத்து இதுதான்’…. தமிழக அரசியல் களத்தில் மாறப்போகும் அடுத்த பெரிய விக்கெட்….. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தமிழக அரசியலையும் திரைத்துரையையும் என்றும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. கடந்த அரை நூற்றாண்டில்…

30 minutes ago

“காரில் பிணம்… கதறிய மனைவி”… ஒரே நாளில் போட்டுக்கொடுத்த ரத்தக் கறை…. ஓமலூர் தொழிலதிபர் கொலையில் அம்பலமான கொடூரம்….!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலக்கவுண்டனூரைச் சேர்ந்த சிமெண்ட் செங்கல் வியாபாரி பூபதி என்பவர், வழிப்பறி கொள்ளையர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகக்…

37 minutes ago

செப்டம்பர் 10-ல் லண்டன் பறக்கும் CM விஜய்…. விவாகரத்து வாபஸுக்குப் பின் காத்திருக்கும் சங்கீதா…. கசிந்த ரகசிய தகவல்….!

தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன்…

45 minutes ago

“சட்டமன்றத்தில் திடீரென நுழைந்த இன்பநிதி”…. மாடத்திலிருந்து பார்த்த காட்சி… ஸ்தம்பித்த தலைமைச் செயலகம்….!

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், மாநிலத்தின் மிக முக்கியத் துறைகளான…

55 minutes ago