#image_title
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அர்ச்சனா கல்பத்தி தயாரிக்கிறார். இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, மைக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் அப்பா மகன் என இரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து ரிலீஸ் ஆன மூன்று படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி இணையத்தில் வைரல் ஆனது. வருகிற செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி கோட் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
ஏனென்றால் தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். விஜயின் 69-ஆவது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதனால் விஜய் நடிக்கும் கோட் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மறைந்த தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலம் கோட் படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பான செய்திகள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது. இந்த நிலையில் விஜய், அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட் பிரபு ஆகியோர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளனர். AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை படத்தில் பயன்படுத்த அனுமதி அளித்ததற்கு பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மகன்களுக்கு நன்றி கூறியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
#image_title
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…