டிடிஎஃப் வாசன் நடிப்பில் உருவாகியுள்ள மஞ்சள் வீரன் என்ற திரைப்படம் வருகின்ற பொங்கல் அன்று அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு போட்டியாக வெளியாக உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பைக் சாகசம் செய்து வீடியோக்களை வெளியேற்றி யூடியூப்பில் பிரபலமானவர்தான் TTF வாசன். குறிப்பாக இவருக்கு 2K கிட்ஸ் ரசிகர்கள் அதிகம் என்பதால் அவர்களை கவரும் வகையில் தொடர்ந்து அதிவேகமாக பைக் ஓட்டுவது மற்றும் பைக்கில் வீலிங் செய்வது என பல வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
ஒரு கட்டத்தில் சாலை விதிகளை மீறியதற்காக இவருடைய பைக் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து இவர் சர்ச்சையில் சிக்கினார். சில மாதங்கள் சிறை தண்டனைக்கு பிறகு ஜெயிலில் இருந்து ஜாமினில் வெளிய வந்த இவர் தற்போது பைக் ஓட்ட முடியாததால் சொந்தமாக கடை ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றார். இப்படி இருக்கையில் இவருடைய நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் தான் மஞ்சள் வீரன்.
இந்த திரைப்படத்தில் கூல் சுரேஷ் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு போட்டியாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. முதல் படத்திலேயே அஜித்துக்கு போட்டியாக களம் இறங்கும் டிடிஎஃப் வாசனுக்கு மஞ்சள் வீரன் வரவேற்பு கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அஜித்துக்கு போட்டியாக வந்து இவரால் ஜெயிக்க முடியாது என்பதால் டிடிஎஃப் வாசன் படத்தை தனியாக வெளியிடப்பட குழு திட்டமிடும் எனவும் கூறப்படுகிறது
ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…