#image_title
ஸ்ரேயா கோஷல் இந்தியாவின் பிரபல மற்றும் புகழ் பெற்ற பின்னணி பாடகி ஆவார். தனது வசீகரிக்கும் குரலால் மக்களின் மனதில் இடம் பிடித்தவர். ஸ்ரேயா கோஷல் தனது நான்காவது வயதில் இருந்தே இசையை கற்க தொடங்கினார்.
பின்னர் தனது 16 வயதில் தொலைக்காட்சியில் பாடும் ரியாலிட்டி ஷோவான சரிகம வில் வென்ற பிறகு திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி இவரை தனது படங்களில் பாடுவதற்கு வாய்ப்பளித்தார். 2002 ஆம் ஆண்டு தேவதாஸ் படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
முதல் பாடலை பாடிய பின்னரே சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது வென்றார். ஸ்ரேயா கோஷல் திரைப்படங்களில் பாடுவதற்கு முன்பு சில ஆல்பங்களிலும் பக்தி பாடல்களிலும் பாடியுள்ளார் ஸ்ரேயா கோஷல்.
#image_title
தமிழில் சூர்யா நடித்த ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் முன்பே வா என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழில் அறிமுகமானார் ஸ்ரேயா கோஷல். அதைத் தொடர்ந்து பல பாடல்களை பாடி உள்ளார் ஸ்ரேயா கோஷல். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி, பெங்காலி, மராத்தி, அசாமிஸ், பஞ்சாபி, ஒரியா என பழமொழிகளில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார் ஸ்ரேயா கோஷல். தமிழில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் ஹிட் ஆனது.
சினிமாவில் வெற்றிகரமான பாடகியான ஸ்ரேயா கோஷல் தனது சிறுவயது நண்பரான ஷிலாதித்யா முஹோபாத்தியாயா என்பவரை 10 வருடங்களுக்கு மேல் டேட்டிங் செய்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 2021 ஆம் ஆண்டு தேவ்யான் என்ற மகன் பிறந்தார். இவரது கணவரின் பிசினஸ் என்ன அவர் என்ன செய்கிறார் என்பதை பற்றி இனி காண்போம்.
இந்தியாவின் முக்கியமான பாடகியாக இருக்கும் ஸ்ரேயா கோஷலின் கணவர் ஷிலாதித்யா முகபாத்தியாயா வணிக உலகில் ஒரு முக்கியமான நபராக இருந்து வருகிறார். ட்ரூகாலர் செயலியில் உலகளாவிய தலைவராக ஸ்ரேயா கோஷலின் கணவர் ஷிலாதித்யா முகபாத்தியாயா இருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ட்ரூகாலரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
#image_title
இது தவிர சிலாதித்யா முகபாத்தியாயா வணிக மேம்பாடு, மொபைல் பயன்பாடுகள், மென்பொருள் திட்டம், மேலாண்மை, தயாரிப்பு மேலாண்மை மற்றும் ஆட்டோமோஷன் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் நிபுணராக உள்ளார் என்று அவரது LinkedIn ப்ரொபைல் மூலம் நமக்கு தெரிகிறது. இதற்கு முன் அவர் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட SaaS நிறுவனமான CleverTopபில் விற்பனை இயக்குனராகவும் பின்னர் துணை விற்பனை துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
ஸ்ரேயா கோஷலின் கணவர் ஷிலாதித்யா முகபாத்தியாயா இரண்டு ஸ்டார்ட் அப்பளை நிறுவியுள்ளார். HipCask என்ற செயலி, இது பயனர்களுக்கு ஒயின் சேகரிப்புகளை தேர்வு செய்ய உதவுகிறது. மற்றும் சிறு வணிகங்களுக்கான கட்டண பயன்படான Pointshelf என்ற செயலியையும் அவர் தொடங்கியுள்ளார். ஷிலாதித்யா முகபாத்தியாயா 1406 கோடி மதிப்பிலான கம்பெனி ட்ருகாலர் க்ளோபல் ஹட்டாக இருக்கிறார். தனியாக ஸ்ரேயா கோஷலின் நிகர மதிப்பு கிட்டத்தட்ட 200 கோடியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…