Connect with us

தல-னா…. லியோ சக்ஸஸ் மீட்டில் தல அஜித் பற்றி பேசிய விஜய்… ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன தெரியுமா..?

CINEMA

தல-னா…. லியோ சக்ஸஸ் மீட்டில் தல அஜித் பற்றி பேசிய விஜய்… ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன தெரியுமா..?

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Actor Vijay

   

அனிருத் இசையமைத்திருந்த லியோ படம் 12 நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. முன்னதாக ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காகம் ஒரு இடத்தில் இருக்காது.

அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கும். மற்ற பறவை விலங்குகளை தொந்தரவு செய்யும். ஆனால் பருந்து அமைதியாக இருந்து காகம் தொந்தரவு செய்தால் கூட வேகமாக உயிர பறந்து விடும். அது போன்று காகம் உயரமாக பறக்க ஆசைப்பட்டால் பறக்க முடியாது. கீழே வந்து விடும். அந்த வகையில் மௌனம் தான் சிறந்தது என சூப்பர் ஸ்டார் பேசியிருந்தார்.

இந்நிலையில் லியோ வெற்றி விழாவில் பங்கேற்ற விஜய் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். அதாவது சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் விதமாக புரட்சித்தலைவர்னா ஒருத்தர் தான்.. நடிகர் திலகம்னா ஒருத்தர் தான்.. புரட்சி கலைஞர்னா ஒருத்தர் தான்.. சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர் தான்.. உலகநாயகன்னா ஒருத்தர் தான்..

அதே மாதிரி தளபதிக்கு அர்த்தம் தெரியுமா? தளபதி மன்னருக்கு கீழ தான் இருப்பாங்க. மக்கள் நீங்கதான் மன்னன். நான் உங்களுக்கு கீழே இருக்க தளபதி. நீங்க ஆணை இடுங்க. நான் செஞ்சிட்டு போறேன் என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

Actor Vijay

author avatar
Priya Ram
Continue Reading
To Top